சிட்டு_குருவி_லேகியம்

#சிட்டு_குருவி_லேகியம் #ரகசியம்

நவீன அறிவியல் வளர்ச்சியில் #சிட்டுகுருவி காணமல் போனதா ?

அன்றைய பாரம்பரிய அறிவியல் சாஸ்திரத்தில் சிட்டுகுருவி லேஹ்யம் செய்து சிட்டுகுருவியை காணாமல் செய்துவிட்டோமா?

போக உணவர்வை அதிகரிக்க –போலி மருத்துவர்கள் உபயோகப்படுத்தியதே இந்த #மாய_வார்த்தை
#சிட்டு_குருவி_லேகியம்..

நீர்முள்ளி விதையின் குழு உரிச்சொல் (#பரிபாஷை ) சிட்டுக்குருவி .

#நீர்முள்ளி_விதை சிட்டுக்குருவியின் விருப்பமான உணவுகளில் ஒன்று ..

ஆக சிட்டுக்குருவி என்றால் நீர்முள்ளி விதை எனபது உண்மை ..

விந்துவை கட்டும் –போக உணர்வை அதிகபடுத்தும் சிட்டுக்குருவி லேஹியத்தில் –சிட்டுக்குருவியே இல்லை எனபது தான் உண்மை!

சிட்டு குருவி லேஹ்யம் செய்ய தேவையான பொருட்கள்

ஜாதிக்காய் ,
ஜாதிபத்திரி ,
தக்கோலம் ,
அதிமதுரம் ,
மாயக்காய்,
அதிவிடயம் ,
குரோசனி,
திரிபலை ,
தாளிசபத்திரி ,
தகர விதை ,
பூனைகாலி விதை ,
திரிகடு ,
செண்பகமொட்டு ,
கொட்டம்,
வால்மிளகு ,
கஞ்சா (இதற்க்கு பதில் கசகசாவிதை ), முந்திரி பழம்,
நாட்டு சர்க்கரை ,
கற்கண்டு ,
அபின் (இதுவும் இப்போது கிடைக்காது –சேர்க்க முடியாது ),
தாற விதை
நீர்முள்ளி விதை (சிட்டு குருவி ) தேவையான அளவு பால் ,நெய் சேர்ந்து செய்யலாம் சிட்டு குருவி லேகியம்.

பரிபாஷை தெரியாதவன் மருத்துவன் ஆக முடியாது என்பதற்கு உதாரணம் இந்த சிட்டு குருவி லேஹ்யம்.

போலி மருத்துவரிடம் ஆண்மை குறைவுக்கு மருந்து எடுத்து ஏமாறாதீர்கள்!

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...