நீரில்_கலந்து_குடிக்க மிகவும் சிறப்பான 7_வகை_மருந்துகள்


#ஓமம் :
ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள், மாதவிடாய் வலியை ஆகியவற்றை குணமாக்கலாம்.

#சீரகம் :
ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் உணவு மனண்டலம் சீராகும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

#பார்லி :
ஒரு டீஸ்பூள் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் சேர்த்து நன்கு காய்ச்சி, அதை இரவு முழுவதும் வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறும்.

#கொத்தமல்லி விதை :
ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவித்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தலாம்.

#வெந்தயம் :
வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம்.

#அருகம்புல் :
ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்து அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

#உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், இதனால் உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...