ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது.
கோயிலின் பெருமைகள் :
(1) பெரிய கோவில்
(2) பெரிய பெருமாள்
(3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன்
(5) பெரியவசரம்
(6) பெரிய திருமதில்
(7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது.
ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் உள்ளன. அவர்களின் பெயர்கள்.
(1) ஸ்ரீதேவி
(2) பூதேவி
(3) துலுக்க நாச்சியார்
(4) சேரகுலவல்லி நாச்சியார்
(5) கமலவல்லி நாச்சியார்
(6) கோதை நாச்சியார்
(7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.
(1) விருப்பன் திருநாள்
(2) வசந்த உத்சவம்
(3) விஜயதசமி
(4) வேடுபறி
(5) பூபதி திருநாள்
(6) பாரிவேட்டை
(7) ஆதி பிரம்மோத்சவம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆடி
(4) புரட்டாசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆவணி
(4) ஐப்பசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.
இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
(1) கோடை உத்சவம்
(2) வசந்த உத்சவம்
(3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை
(4) நவராத்ரி
(5) ஊஞ்சல் உத்சவம்
(6) அத்யயநோத்சவம்
(7) பங்குனி உத்திரம்.
பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
(1) பொய்கை ஆழ்வார்,
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
(2) நம்மாழ்வார்,
திருமங்கை ஆழ்வார்,
மதுரகவி ஆழ்வார்
(3) குலசேகர ஆழ்வார்
(4) திருப்பாணாழ்வார்
(5) தொண்டரடிபொடி ஆழ்வார்
(6) திருமழிசை ஆழ்வார்
(7) பெரியாழ்வார், ஆண்டாள்
No comments:
Post a Comment