💫 ராவணனின் தாயார் ககேசி ஒரு சிறந்த சிவபக்தை தினசரி சிவபெருமானுக்கு பூஜை செய்பவள்.
💫 தன் தாயார் சிவபூஜை செய்வதற்காகவும் அதே சமயம் தன்னுடைய சக்தி மேலும் பெருகவும் ராவணன் கைலாயத்தில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வர முடிவு செய்தான்.
💫 சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவருடைய கடும் தவத்திற்கு மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவனுக்கு ஜோதி லிங்கத்தை பரிசாக அளித்தார்.
💫 ஆனால் அதை எங்கும் கீழே வைக்காமல் இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார் சிவபெருமான்.
💫 ராவணனும் ஜோதி லிங்கத்தை எடுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தான். யோகி லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் உண்ணவோ களைப்பாறவோ யோசிக்காமல் பறந்து கொண்டிருந்தான்.
💫 ராவணன் ஜோதி லிங்கத்தை இழுத்துச் செல்வதைக் கண்ட தேவரிஷிகளும், முனிவர்களும் அஞ்சினர்.
💫 அதி அற்புதமான ஜோதிலிங்கம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டால் இராவணனின் சக்தி மேலும் அதிகமாகும். அதன் விளைவு உலகிற்கே பெரும் அழிவைத் தரும் என்று கருதினார்கள்.
💫 தேவ ரிஷிகளும் முனிவர்களும் ஒன்றாக சேர்ந்து பிரம்மாவிடம் அதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
💫 ஆனால் பிரம்மதேவனும் நீங்கள் அனைவரும் சென்று ஆனைமுகத்தனை ஆவன செய்ய கேட்டுக்கொண்டார்.
💫 அவர்கள் அனைவரும் முதன் முழு கடவுள் கணபதியிடம் சென்று முறையிட்டனர்.
💫 தேவ ரிஷிகளின் வேண்டுதலை ஏற்று விநாயக பெருமான் கண் அசைத்தார்.
💫 வானில் பறந்து கொண்டிருந்த ராவணனுக்கு தாகம் ஏற்பட ஆரம்பித்தது.
💫 சரி நீர் மட்டும் பருகி கொள்ளலாம் என்று அவ்வப்போது ஒரு கையால் ஜோதி லிங்கத்தை பிடித்தபடி மறுகையால் ஆங்காங்கே ஓடும் நதியில் இருந்து நீர் பருகினான்.
💫 நீர் பருகிய உடன் வயிறு நிரம்ப ஆரம்பித்தது சிறுநீர் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது.
💫 ஆனால் ஜோதி லிங்கத்தை எங்கும் கீழே வைக்கக்கூடாது. மேலும் சிறுநீர் கழித்த பின் உடல் சுத்தி வர வேண்டும் என்ன செய்வது என்று யோசித்தபோது...
💫 ராவணன் எதிரே விநாயகப்பெருமான் ஒரு சிறுவனாக வடிவம் எடுத்து வந்து கொண்டு இருந்தார்.
💫 அந்த சிறுவனை அழைத்த ராவணன் இந்த ஜோதி லிங்கத்தை சிறிது நேரம் கையில் பிடித்து கொண்டு இரு.நான் என் கடன்களை முடித்து கொண்டு வருகிறேன் என்று கேட்க.
💫 அந்த சிறுவனோ , நான் வைத்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கோ அவசரமாக என் இருப்பிடம் செல்ல வேண்டும்.
💫 நான் மூன்று எண்ணுவேன் அதற்குள் வந்து விடுங்கள். என்று சொல்லி ஜோதி லிங்கத்தை கையில் பிடித்து கொண்டான்.
💫 ராவணன் அருகில் இருந்த நதிக்கரைக்கு ஓடிச்சென்று தன் வேலையை முடித்துக்கொண்டு இருந்தான்.
💫 சிறுவனான விநாயகர் ஒன்று, இரண்டு, மூன்று, என்று ராவணனை பார்த்தபடி எண்ணினான்.
💫 என் வேலை முடிந்து விட்டது இனி என்னால் காத்திருக்க முடியாது என்று கூறி அந்த இடத்திலேயே ஜோதி லிங்கத்தை கீழே வைத்து விட்டான்.
💫 அதைக்கொண்டு பதறிப் போன ராவணன் ஓடோடி வந்து ஜோதி லிங்கத்தை தரையில் இருந்து எடுக்க முயன்றான் முடியவில்லை.
💫 கோபம் கொண்ட ராவணன் அந்த சிறுவனின் தலையில் ஒரு குட்டு வைத்தான்.
💫 அந்த சிறுவன் விநாயகப் பெருமானாக காட்சி தந்து ராவணனுக்கு புன்னகையுடன் தரிசனம் தந்து விட்டு சென்றார்.
💫 ராவணனும் தான் ஏமாற்றப்பட்டது சிவ மைந்தனால் என்ற பெருமையுடன் இலங்கை நோக்கி திரும்பினான்.
💫 இத்தகைய சம்பவம் நடந்த இடம் தான் கோகர்ணம் என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு சிறிய பள்ளம் இருப்பதை இப்போதும் காணலாம்.
No comments:
Post a Comment