ஒரு நாள் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், காலை வேளையில் மேற்கொள்ளும் பழக்கங்கள் மிகவும் முக்கியமானவை. காலையில் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் செயல்களை மேற்கொண்டு வந்தால், நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
காலையில் என்னென்ன செயல்கள் செய்தால் அன்றைய நாள் சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
#அதிகாலையில் எழுவது
தினந்தோறும் விடியற்காலையில் எழும் பழக்கத்தை பழக்கி கொள்ள வேண்டும். ஏனெனில், விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பதுடன் சுவாச மண்டலத்தை நல்ல முறையில் இயங்கச்செய்யும். அந்த நேரத்தில் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை கட்டாயமாகச் செய்ய வேண்டும்.
#குளிர்ந்த நீரில் குளிப்பது
பொதுவாக நம் உடல் வெப்பமாக இருப்பதால், உடல் சூட்டைத் தணிக்க குளிர்ந்த நீரினைக் கொண்டு குளிப்பதும், தூய்மையான குளிர்ந்த நீரை குடித்து வியர்வையின் வழியாக சூட்டை வெளியேற்றுவது தான் சிறந்த வழிகள். சூடான நீரால் குளிப்பதால் உடல் மேலும் சூடாவதுடன், சோம்பல் உணர்வும் ஏற்படும்.
குளிக்கும்போது எடுத்தவுடன் தலையில் நீர் ஊற்றுவதால் உடல் சூடு மீண்டும் கால் பாதத்துக்குதான் செல்லும். அதனால் முதலில் கால் பாதத்தில் இருந்து மேல் பாகங்களில் படுமாறு ஊற்றி இறுதியாக தலைக்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி தினமும் காலையில் 6 - 7 மணிக்குள் குளித்துவிட வேண்டும்.
#சூரிய_ஒளிபடுதல்
இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கும் அதிக உடல்நலக்குறைபாடுகள் வருவதற்கு காரணமே, சூரிய ஒளி நம்மீது படாததுதான். காலையில் 6 - 8 மணி நேரத்திற்குள், மிதமான சூரிய ஒளி நம் உடல் மீது படுமாறு நிற்கலாம். சூரிய ஒளி நம் உடல் மீது படுவதால், இரத்த ஓட்டம் சீராக இயங்கும். உடலில் உள்ள லட்சக்கணக்கான செல்களும் நன்றாக வேலை செய்யும்.
#காலை உணவு சாப்பிடுதல்
ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான அதிகபட்ச ஆற்றலைக் கொடுப்பது காலை உணவுதான். துரித உணவுகளைச் சாப்பிடுவதால் பலருக்கும் காலை நேரம் பசி எடுப்பதில்லை. பலரும் தெரிந்தே காலை உணவைத் தவிர்க்கின்றனர். இவ்வாறு காலை உணவை தவிர்ப்பது அடிக்கடி உடல் நலன் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
#காலையில்_செய்யக்கூடாத_விஷயங்கள்
#காபி
காலையில் எழுந்ததும் பற்களை துலக்காமல் பெட் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
#கொழுப்புமிக்க உணவுகள் :
காலை உணவின் போது இட்லி, தோசை, சப்பாதி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கொழுப்புமிக்க மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
#தாமதமாக எழுவது
சிலர் இரவில் நீண்ட நேரம் கண் விழித்துவிட்டு, மறுநாள் காலையில் தாமதமாக எழுவார்கள். இப்படி தாமதமாக எழுவதால், அன்றைய நாள் முழுவதும் தாமதமாக ஒருவித பதற்றத்துடன் செய்ய வேண்டியிருக்கும். எனவே, காலையில் விரைவாக எழ முயற்சி செய்ய வேண்டும்.
#பற்களை துலக்குவது :
காலையில் ஒருவர் குறைந்தது 3-4 நிமிடங்களாவது தங்களின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பற்களில் கறைகள் தங்கி, பற்களின் அழகு மட்டுமின்றி, ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
No comments:
Post a Comment