அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்கிறார் பெண் சித்தர் அவ்வை. அரிதாய் தோன்றிய மனித உடல் அழியக் காரணம் என்ன எனச்சிந்தித்தால் . உயிர் போய்விட்டது என்கிறோம். அந்த உயிர் இத்தனை நாள் எங்கிருந்தது என்ற கேள்வி வருகிறது. உயிர் எங்கே இருக்கிறது என நவீன விஞ்ஞானம் இதுவரை அறுதியிட்டுக் கூறவில்லை.
தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது அதன் தொப்புழ்க் கொடியில் உயிர் அந்தரந்தமாக இருக்கிறது என்கிறது இந்தப் பாடல். எனவேதான் பிறக்கும் குழந்தை தொப்புழ்க் கொடியுடன் சேர்ந்தே பிறக்கிறது
ஒரு குழந்தை பிறந்து ஒருமணிநேரம் வரைக்கும் தொப்புள் கொடியை அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் கொடியினுள் இருக்கும் Stem Cells திரவம் மெல்ல மெல்ல குழந்தையின் வயிற்றுக்குள் முழுவதுமாக இறங்கிவிடும் இது அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதுக்குமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும் அக்குழந்தைக்கு CANCER என்ற நோயே வராது.
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆக வேண்டும். இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர்.
அழுகையே பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல் காரியம். குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது. போகும் போது உயிரும் சுவாசத்துடன் கலந்து வெளியே செல்கிறது.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே .
– அகத்தியர் ஞானம் 23
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை”
மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம்.
இவ்வாறு வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர்.
மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள்.
வயது முதிர்ந்த கிழவரும் மனத்தின் சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என ஆணை இடுகிறார் சிவவாக்கியர். இவ்வாறு
மூச்சிலே இருக்குது சூட்சமம்!
ஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்
போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்
போராது காயம் பிரான் நந்தி ஆணையே!
பதினாறு மாத்திரை ஓடி வீணாகக் கழிந்துகொண்டிருக்கும் மூச்சை முறையாக விதிப்படி அடக்கியாளும் ஆற்றல் பெற்ற யோகியர், ஆயிரம் ஆண்டுகள் நீரில் முழுகி இருந்தாலும், மண்ணில் ஆயிரம் ஆண்டுகள் புதையுண்டுக் கிடந்தாலும் உடல் அழியாது என்கிறார்.
ஆக மூச்சை நெறிப்படுத்தினால் உடம்பிற்கு அழிவில்லை என்கிறார்கள். ஆனால் அதை ஏன் முறையாக ஆராய்ந்து மூச்சை நெறிப்படுத்தும் முறைகளை மக்களுக்கு அறியப்படுத்தவில்லை? தவறு என்றால் இந்தக் கூற்று தவறு என நிருபிக்கட்டுமே! பிறகு இதை ஏன் நாம் பேசிக்கொன்டிருக்கப்போகிறோம் ?
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே
இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார்கள், நம் சித்தர்கள். இதை ஏன் நாம் முக்கியமாக எடுத்து ஆராயவில்லை?
இடது மூக்கு வழியாக 16 மாத்திரை உள்ளே இழுப்பது பூரகமாகும். 64 மாத்திரை அளவு உள்ளே அடக்குதல் கும்பகமாகும். பின்னர் வலது மூக்கின் வழியாக 32 மாத்திரை வெளியிடுதல் ரேசகமாகும். (1 நிமிடத்திற்கு
6 முறை சுவாசிக்க வேண்டுமாம்..60 நிமிட நேரத்திற்கு 6 விதம் 360 முறை.. 1நாளைக்கு 24 மணி நேரத்திற்கு 360 விதம் 8,640 முறை சுவாசிக்வேண்டும்)
இதுவே காற்றைப் பிடிக்கும் கணக்கு. ஆனால் இதை முறைப்படுத்தல், அத்தனை சுலபமல்ல. தக்க ஒரு குருவின் வழிகாட்டல் இல்லாமல் இதுவும் கைக்கூடாது. எனவே இதைத் தானே செய்ய முயலவேண்டாம் .
வெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம் விதியை மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள் நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே தங்கள் விருப்பப்படி நிறைவேற்றிக்கொள்ள எளிய முறைகளைக் கண்டு கூறியிருக்கிறார்கள் நம் சித்தர்கள். இதற்குச் ‘சரம் பார்த்தல்’ என்று பெயர்.
‘ஞானசர நூல்’ எனச் சரம் பார்த்தல் பற்றியும் நமது வாழ்வில் நாம் விரும்பும் வெற்றியை விரும்பிய விதமே பெறும் ஆற்றலைப் பெறும் வழிகளையும் நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
கேட்கில் இடம்: தூது ஆடை, அணி பொன்பூணல்
கிளர்மனம், அடிமைகொளல், கீழ்நீர் கிண்டல்
வாழ்க்கை மனை எடுத்தல், குடிபுகுதல், விற்றல்
மன்னவரைக் காணல், உண்மை வறுவல், சாந்தி
வேட்கை, தெய்வப் பதிட்டை, சுரம் வெறுப்புத் தீர்த்தல், விந்தைப் பெறுதல், தனம் புதைத்தல் மிகவும் ஈதல், நாடகமல மலர் முகத்தாய் நரகம் தீர்த்தல் நன்றேயாம் இவ்வை எல்லாம் நயந்து பாரே!
சந்திர கலை அதாவது இடது நாசியில் மூச்சு ஓடும் போது செய்யத்தக்க காரியங்களின் பட்டியல் இது. செய்தால் இவற்றில் வெற்றி நிச்சயம் என ஞான சர நூல் 8 கூறுகிறது.
பார்க்கில் வலம்: உபதேசம், வித்தை, சேனை,
படையோட்டல், பயிர்செட்டுக் களவு, சூது,
பேர்க்கவொணா வழக்குக் கரிபரி, தேரூர்தல்
பிறங்கும் எழுந்திடுதல், சங்கீதம், பாடல்
வார்த்தை, பகைப் பக்கம் கோள், பசாசு தீர்த்தல்,
மந்திரஞ் சாதித்தல், மருந்துண்ணல், உறங்கல்,
கோத்த புன்னாடல், கொல்விடங்கள் தீர்த்தல்
கொடும்பிணி, தம்மென்பன யோகங் குறிக்கும் தானே
– ஞான சர நூல் 9
இவை சூரிய கலை எனப்படும் வலது நாசியில் சுவாசம் ஓடும் போது செய்யத்தக்கவையாகும். இந்தச் சர ஞானமும் சரிவர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முறைபடுத்தப்படுமானால் தமிழர் சமுதாயம் உலகின் வளமான சமுதாயமாக ஆகிவிடும். ....!
“இருவினை தீர்க்கும்
எமனையும் வெல்லும்
திருவடியைப் பாட வந்தோம்”
என்று வீரமணிதாசனின் ஐயப்பன் பாடல் குறிப்பதும் இதைத்தான்.
இராகு, கேது குறிப்பதுவும் இதைத்தான்.
நமது உடலில் நிறைய எண்ணற்ற இருவினைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
மாந்த உடலில் நிகழும் 180 டிகிரிக்கு நேர்எதிரான எந்தவொரு இயக்கமும் இராகு, கேது எனலாம். சோதிடத்தில் இராகு உச்சமானால் கேது நீச்சமாகும். கேது உச்சமானால் இராகு நீச்சமாகும். இது விதி. அதே போல உலகில் பகல் உச்சமானால் இருள் நீச்சமாகும். இருள் உச்சமானால் பகல் நீச்சமாகும். அவ்வளவுதான் சமாச்சாரம். நாசி உள்வாங்கும்(ராகு) ,வெளித்தள்ளும்(கேது) இரண்டு வேலையையும் செய்கிறது. நாசியில் ஒடும் சுவாசம்தான் வாசி என்னும் வாசுகி பாம்பு. புருவ மத்தி மேரு மலை. ராகு அசுரர், கேது தேவர். அமிர்தம் எப்படி வருகிறது என புரிந்துகொள்ளவும்...!
No comments:
Post a Comment