ஒருவர், தான் செய்யும் காரியங்கள் எல்லாம் வெற்றியடைந்தால், மிகவும் சந்தோஷம் அடைவார்கள். அதே நேரம், ஏதேனும் தடை ஏற்பட்டாலோ, அல்லது நடக்காமல் போனாலோ, நமக்கு நேரம் சரியில்லை என்று நினைத்து பரிகாரம் செய்வார்கள். மனித வாழ்வில் கிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பொதுவான பரிகாரங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
*தடைபட்ட திருமணம் நடைபெற சக்தி வாய்ந்த பரிகாரங்கள் :-*
ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் அருகில் உள்ள சிவன் கோவில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சாத்தி அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
பிரதோஷ நாளில் நந்திபகவானுக்கு பால், தயிர் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
*ஏற்றமான வாழ்வு அமைய :-*
விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம், வன்னி மரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபட்டால் சனி, ராகு, கேது, தசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன் பொருள் சேர்க்கை போன்ற பல நன்மைகள் நடைபெறும்.
*கடும் குடும்ப பிரச்சனைகள் தீர பரிகாரம் :-*
தினமும் வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.
*சகல தோஷம் நீங்க பரிகாரம் :-*
*ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை தினசரி காலையில் 108 முறை சொல்லி வரவும்.*
அமாவாசை தோறும் பசுவிற்கு பச்சரிசி, தவிடு மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வந்தால் சகட தோஷம் நீங்கி வளமான வாழ்க்கையை பெறலாம்.
*கல்வியில் மேன்மை பெற பரிகாரம் :-*
பிள்ளைகளின் படிப்பு நன்றாக வர உதவியாக இருப்பவர் விநாயகப் பெருமான். 27 செம்பருத்திப் பூக்களை மாலையாக தொடுத்து, ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் விநாயகப் பெருமானுக்குச் சூட்ட வேண்டும். இதேபோல ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து செய்தால் பிள்ளைகளின் கல்வியில் உள்ள மந்த நிலை மாறி கல்வியில் உயர்வு உண்டாகும்.
அல்லது 27 ஏலக்காய்களை மாலையாகத் தொடுத்து விநாயகப் பெருமானுக்குச் சூட்டி வழிபட கல்வி அறிவு உயரும்.
*மனநிம்மதி பெற பரிகாரம் :-*
மனநிம்மதிக்கு மயிலாடுதுறை அருகில் உள்ள தருமபுரம், யாழ்மூரி நாதர்-தேன் அமுதவல்லி அருள்பாலிக்கும் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினால் பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி பெறலாம்...
No comments:
Post a Comment