1.நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக
கவனித்தால் ,அது தானாகவே கும்பத்தில் {நிறுத்தல் }
உன்னை கொண்டு சேர்த்து விடும் .இது பிராணாயாமம்
2.நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக
இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும்
உனக்கு நல்லது
3.மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு
வேண்டுமானாலும் எந்தச் சூழ்னிலையிலும் இருக்கலாம்
4,உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும்
5.மனதை நீ வெளி விஷயங்களிலும் ,எண்ணங்களாலும்
திசைதிருப்ப விடக்கூடாது .
வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த
வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான
நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும் .
ஒரு கணமும் கவனக் குறைவிலோ ,சோம்பலி லோ
வீணாக்காதே .
6.யாருக்கும் இம்மியும் தடையோ ,தொந்தரவோ
விளைவிக்காதே .தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே
செய்துகொள் .
7.விருப்பும்,வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை
8.எண்ணங்கள னைத்தையும் குவித்து ஒரு முகப்படுத்தி
தன்னுள் செலுத்தி தயங்காமல் :”நான் யார் “”விசாரணை
செய்ய வேண்டும்
ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே
அடங்கும்
இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம் ,
மனம் திடீரென்று கிளம்பும் .அதனால் கவனமுடன்
விசாரத்தை தொடர வேண்டும் .
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம்
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம்
“‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம்
அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல் இருத்தலே
பரிபூரண நிலையாகும்
இது நிஜம் .
No comments:
Post a Comment