பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது.

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்.

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.

வில்வத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன .
குறிப்பாக மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பதில் பயன்கள்:

நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.

ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
வில்வ மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.



வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

வில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு  சொல்ல வேண்டும்.

➡ போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -

இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்:

வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.

வில்வம், 'சிவ மூலிகைகளின் சிகரம்' என்றும் 'மும்மூர்த்திகளின் உறைவிடம்' என்றும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.  ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்தினாலும், மீண்டும் தூய்மைப்படுத்தி பயன்படுத்த முடியும். இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்றது வில்வம். இதற்கு, கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலுரம் எனப் பல பெயர்கள் உள்ளன. வில்வ மரத்தின்  இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை... என இதன் அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பலன் தரக்கூடியவை

வில்வ தளம் என்பது, மூன்று இலைகள் சேர்ந்தது. வில்வத்தின் இடதுபக்க இலை 'பிரம்மா' என்றும், வலதுபக்க இலை 'விஷ்ணு' என்றும் நடுவில் இருப்பது 'சிவன்' என்றும் சொல்லப்படுகிறது. வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக்  கருதப்படுகிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளின் அம்சமாகப் போற்றப்படுகிறது.

வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். இது தீராத ஜென்ம பாவங்களைப் போக்கக்கூடியது . இப்படிப்பட்ட வில்வமரத்தின் சிறப்புகளை பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.

வில்வமரம் அதிகமாக சிவாலயங்களில்தான் வளர்க்கப்படுகின்றது.சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.ஞாயிறன்று வில்வ இலை அர்ச்சனை மிகச் சிறப்பான ஒன்று . வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும்போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.சிவனின் அருளைப் பெறமுடியும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன.

வில்வ இலை அர்ச்சனைக்குப் பயன்படும். வில்வப் பழம் அபிஷேகத்துக்கு உகந்ததாகும். வில்வ மரத்தின் கட்டையானது யாகம்,ஹோமம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது. வில்வ மரத்தின் வேர் மருந்தாகப் பயன்படுகிறது. வில்வப்பழத்தின் ஓட்டைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீசூர்ணத்தையும், திருநீற்றையும் வைத்துக்கொள்ளலாம். அப்படி வைத்துக்கொள்வதால், மருத்துவப் பலன்கள் நமக்கு கிடைக்கும்.

வில்வ மரத்தின் சிறப்புகள்:

வீட்டில் வில்வமரம் வளர்ப்பது, 'அஸ்வமேத யாகம்' செய்த பலனைக் கொடுக்கும். ஆனால், அதை பக்தி சிரத்தையோடு வளர்ப்பதுடன், அவ்வப்போது பூஜைகள் செய்வது நல்லது.

108 சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் அனைத்தும் சிவரூபம். வேர்கள், கோடி ருத்திரர்கள். வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக்  கருதப்படுகிறது .

ஏழரைச் சனி பிடித்திருப்பவர்களுக்குப் பரிகாரமே வில்வம்தான்.

ஒரு வில்வ இலையைக்கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்வது லட்சம் தங்க மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்வதற்கு ஒப்பானது .

வில்வ மரத்தின் மருத்துவ பயன்கள்:

இது எளிதில் குணமடையாத நோய்களுக்கு சிறந்த மூலிகை மருந்தாகச் செயல்படுகிறது. வில்வ இலைகளை உண்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

காரத்தன்மையுள்ள வில்வ மரத்தின் இலைகளைப் பிழிந்து அதன் சாற்றுடன் பசும்பால் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.

வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல், மூலநோய் நீங்கும். வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் தன்மைகொண்டது. வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாணமுருங்கைச் சாற்றையும் சேர்த்துப் பருகினால், சர்க்கரை நோய் குணமாகும்.

வில்வப்பழத்தை பிழிந்து சர்பத் போன்ற பானங்கள் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும்,

வில்வப்பழத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள் , மாவுச்சத்துக்கள், சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் இ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் நியாசின் ஆகியவை உள்ளன.

பழத்தின் ஓட்டிலிருந்து தைலம் தயாரிக்கலாம். இது `வில்வ தைலம்’ எனப்படும்.

வில்வ இலைகளைப் பறிக்கும்போது கவனிக்கவேண்டியவை:

வில்வ இலைகளை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

வில்வ தளத்தில் இருக்கும் மூன்று இலைகளைத் தனித்தனியாக பறிக்கக் கூடாது. பல்வேறு ஆலயங்களில் வில்வமரம் தலவிருட்சமாக உள்ளது.

சிவபெருமானுக்கு மட்டும் அல்லாமல் திருமகளுக்கும் வில்வ இலையால் பூஜைசெய்யப்படுகிறது. கும்பகோணம் சக்கரபாணிக் கோயிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...