இதில் உள்ள பத்தாம் வகைக் காற்றையறிந்து அதிர்ந்து போனேன்! என்றார் அமெரிக்க விஞ்ஞானி வின்சென்ட்.
நாம் மூச்சில் உள்ளிழுக்கும் காற்று பத்துவித காற்றுகளாக உடலில் பரவுகிறது.
1. மூக்கு வழி வெளியேறும் காற்று
2. வாய் வழி வெளியேறும் காற்று
3. குதம் வழி வெளியேறும் காற்று
4. உடல் செல்கள் முழுமையும் பரவும் காற்று
5. இரைப்பையில் உணவு செரிக்க எரியும் காற்று
மேற்கண்ட ஐந்தும் இயங்கும் காற்று வகையாம்!
கீழ்க்கண்ட ஐந்தும் நிற்கும் காற்று வகையாம்!
6. கண்கள் சுழல உதவும் காற்று
7. கண்கள் இமைக்க உதவும்
8. கொட்டாவியாக வரும் காற்று
9. இருமல், தும்மல் ஏற்படுத்தும் காற்று
10. தனஞ்செயன் என்ற உடலைச் சிதைக்கும் காற்று
இதில் 9 வகையான காற்றையும் நாம் அனைவருமே அனுபவித்து அறிந்திருப்போம். ஆனால் அஃதென்ன 'உடலைச் சிதைக்கும் காற்று'? இதனைப் பற்றித் தமிழ் முன்னோர்கள் தவிர உலகில் வேறு யாரும் கூறவில்லை.
தனஞ்செயன் எனும் ஒருவித விசக்காற்று அனைவர் உடலிலும் உற்பத்தியாகிறது. எடுத்துக்காட்டாக உங்கள் செல்பேசி எந்நேரமும், அருகாமையில் வைஃபை இணைப்பு ஏதும் உள்ளதா என தேடிக்கொண்டே உள்ளதல்லவா? அதேபோல இந்த தனஞ்செயன் காற்று, மனித உடலில் உயிர் இருக்கிறதா எனப் பார்க்கும். உயிர் இருந்தால், உற்பத்தியான காற்று, எந்த வேலையும் செய்யாமல், தானே வெளியேறி விடும். ஆனால் ஒருவேளை உடலில் உயிர் இல்லை எனில், உடல் பிணமாகிவிட்டது எனில், அந்த உடலின் செல்களை அழிக்கும் வேலையைத் தொடங்கும். அதனால் தான் இறந்த உடல் சில மணி நேரத்தில் அழுகவும், நாற்றமெடுக்கவும் தொடங்குகிறது.
பிணத்தின் காது மற்றும் மூக்கில் பஞ்சை வைத்து அடைக்கக் காரணம், இந்த வாயு வெளியேறினால், அருகில் உயிரோடு இருக்கும் உற்றார் உறவினரையும் பாதிக்கும் என்பதால் தான். பிணத்தின் மீது விழுந்து சிலர் அழுவார்கள். அவர்களில் பலர் படாரென மயக்கமடைந்து விழுவார்கள். இதற்கு அவர்களின் சோகம் மட்டும் காரணமல்ல. பிணத்திலிருந்து வெளியேறும் இந்த பத்தாம் காற்றாகிய தனஞ்செயன், அவர்களைப் பாதிப்பதால் அவட்கட்கு மயக்கம் உண்டாகிறது!!! என்னே நம் தமிழ் முன்னோரது நுட்பமான அறிவியல்!!!
No comments:
Post a Comment