இன்றய (சிறப்பு, நாடு) கோபுர தரிசனம் :
அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோவில், நயினாதீவு, யாழ்ப்பாணம் மாவட்டம், ஸ்ரீலங்கா.
(18-மகாசக்தி பீடங்களில், தேவியின் இடுப்பு பகுதி விழுந்த பீடமாகவும், தந்திர சூடாமணி வரலாறு கூறும் 51-சக்தி பீடங்களில்,தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஆதி காலத்தில், நமது திராவிட இனமாகிய தமிழர்களின் முன்னோர்களான நாகர் இனத்தவர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக போற்றப்பட்டு, பின்னர் நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற திருத்தலமாகும். ஆதிகால பெயர்களில் ஒரு சில பெயர்கள் மட்டும் (நமது தமிழகத்தில் நாகர்கோவில், இலங்கையில் நாகதேவன் துறை, நாக (நயினா) தீவு) இன்றும் நிலைத்து நிற்கின்றன. ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக காணப்பட்டுள்ள இந்த நயினாதீவு அம்மன் ஆலய கருவறையில், 8000-ஆண்டுகள் பழமையான சீறும் ஐந்து தலை நாகச்சிலை அருட்காட்சியளிப்பது சிறப்பு. வேட்டை திருவிழா, நவராத்திரி, கேதாரகெளரி விரதம், வரலட்சுமி விரதம் மற்றும் முக்கிய திருவிழா காலங்களில் இலங்கை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நம் தமிழர்களும், சிங்கள மக்களும், (நமது தமிழகத்திலிருந்தும்) திரளாக கலந்து கொள்வார்களாம்.)
ஓம் சக்தி நாகபூசணி அம்மன் பராசக்தி...
No comments:
Post a Comment