கை_தட்டினால்_நோய்_நீங்கும்

பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை பாராட்ட கை தட்டுகிறோம். இப்படி கைதட்டி ரசித்து சிரிப்பதன் மூலம், எந்த நோயும் நம்மை அண்டாமல் விரட்டலாம்.

இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பு வந்து மரணம் அடைகின்றனர்.

இதய நோய் பாதிப்புக்கு ஆளாவதில், உலகத்திலேயே இந்தியர்களுக்குத் தான் முதலிடம். இந்தியர்களுக்கு நோய் வர உடலியல் காரணங்களை விட உளவியல் காரணங்களே அதிகம்.

எதற்கும் உணர்ச்சி வசப்படாமல், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை வந்தாலே, நம்மை எந்த நோயும் அணுகாது.

வெற்றிதான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட, மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றிதான் என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனம்விட்டு சிரிப்பதும், கைதட்டி ரசிப்பதும் அவசியம்.

கை தட்டுவதால் மூளையும், பிற உறுப்புகளும் உற்சாகமாய் இயங்குகின்றன. கைகளில் உள்ள நரம்புகள், இதயம், ஈரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுடன் தொடர்பு கொண்டவை.

இரண்டு கைகளையும் இணைந்து தட்டுவதன் மூலம், நரம்புகள் தூண்டப்படுகின்றன.

நம் உடலில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மி.மீ., குறுக்களவு கொண்டவை.

நாம் டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இவை அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும்.

இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி நம் உடலில் இயல்பாகவே இருக்கிறது. சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, நல்ல பழக்கங்கள், மனமகிழ்ச்சி இவையெல்லாம் எண்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும் எச்.டி.எல்., என்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும்.

இதனால் 99 சதவீத அடைப்பு இருந்தால் கூட தானாக கரைந்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.

கைதட்டும் போது, கை தட்டுபவர்களுக்கு நோய் தீரும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. குறிப்பாக மாரடைப்பு, கேன்சர் போன்ற வியாதிகள் நீங்குமாம்.

எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் திபெத் சென்று இருந்தபோது தலாய்லாமாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. “தனக்கு புற்றுநோய் இருக்கிறது” என்றார் அந்த நபர்.அதற்கு தலாய்லாமா, “நீ தினமும் 20 நிமிடம் உன்னுடைய இரண்டு கைகளையும் சேர்த்து கைதட்டு.

பிறகு பார் நல்ல மாற்றம் கிட்டும்.” என்றாராம்.“நம் கைதானே எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் கைதட்டலாமே, நோய் தொலைந்தால்போதும்” என்ற எண்ணத்தில் தினமும் 30 நிமிடம் தொடர்ந்து கை தடடினார்.

இப்படி தினமும் இந்த பயிற்சியை செய்ததால் தனக்கு இருந்த எலும்பு புற்றுநோய் முழுவதுமாக குணமானது என்கிறார்.

வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது போல, தினமும் 30 நிமிடங்களுக்கு ஜோராய் கை தட்டுங்கள் நோய் வரவே வராது.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...