பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும்,திருவிடைமருதூர் கோயிலுக்கும் உள்ள தொடர்பு மிக நெருக்கமானது ஆகும்.
பட்டினத்தார் இத்தலத்து மருதவாணர் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.
பத்திரகிரியார்இவரது சீடர் ஆவார்.
இவர் ஒரு நாட்டுக்கே ராஜாவாக இருந்து விட்டு
அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு,
துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானார்.
சிவத்தலம் தோறும் தரிசித்து வந்து இருவரும் திருவிடைமருதூர் வந்த தங்கினார்கள்.
பட்டினத்தார் திருவோடுகூட வைத்துக்கொள்ளவில்லை.(திருவோடுகூட பற்றுக்கு அடையாளம்.இதன் கதை மிக நீளம்)
இவரின் சீடரான பத்திரகிரியார் திருவோடு,மற்றும் ஒரு நாயையும் கூட வைத்திருந்தார்.இறைவன் ஒருநாள் ஒரு அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சைகேட்டார்,நானோ பரதேசி என்னிடம் தருவதற்கு ஏதும் இல்லை,இதே கோயிலின் மேலக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான் என்றார்.இறைவனும் அவ்விடத்துக்கு சென்று அங்கிருந்த பத்திரிகிரியாரிடம் பிச்சைகேட்க தன்னை இந்த திருவோடும்,நாயும் சம்சாரியாக்கிவிட்டதே என்று வருந்தி ஓட்டை நாயின் மீது எறிந்தார்.ஓடும் உடைந்தது.நாயும் இறந்தது.இறைவன் தோன்றி பத்திரிகிரியாருக்கும்,நாயுக்கும் முக்தி அளித்தார்.அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது.கிழக்கு மாடவீதியில் நாயடியார் கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு வந்தால் இன்றும் காணலாம்.
பட்டினத்தாரும்,பத்திரகிரியாரும்
Subscribe to:
Post Comments (Atom)
THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE
Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser? Get up ten minutes earlier at 5.50 and get used t...
-
Do you know MINIMALISM ? Do you know Minimalism Fulfilling real life! ------------------ Our father earned less than me. We are four childr...
-
Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser? Get up ten minutes earlier at 5.50 and get used t...
-
Medicinal properties of Pearl Millet If eaten daily in the morning in the form of porridge or kali, it prevents the accumulation of b...
No comments:
Post a Comment