இந்து மதத்தின் மிக முக்கிய கடவுளான சிவபெருமானை பற்றி நாம் முழுவதுமாக தெரிந்து கொள்ள நினைத்தால் நமக்கு ஒரு ஆயுட்காலம் போதாது. ஏனெனில் முதலும், முடிவும் அற்ற ஈசனின் மகிமைகளுக்கும் எல்லை என்பதே கிடையாது. " அவனின்றி ஒரு அணுவும் அசையாது " என்று கூறுவது போல இவ்வுலகின் அனைத்து நிகழ்வுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது ஈசன்தான்.
நாம்தான் அழித்தல் மட்டுமே ஈசனின் வேலை என்று தவறாக நினைத்து கொண்டுள்ளோம்.
சிவபெருமான் மற்ற கடவுள்களில் இருந்து குணத்தில் மட்டுமல்ல உருவத்திலும் மிகவும் வித்தியாசமானவர். மற்ற கடவுள்களை போல் அல்லாமல் சிவபெருமான் சில தருணங்களில் கஞ்சா பிடிப்பது போன்ற படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
சிவபானம் என்னும் பெயரில் வடஇந்தியாவில் கஞ்சாவை புகைத்து விட்டு சிவனை வழிபடுவது மிகவும் பிரபலமானதாகும். ஆனால் இதற்கு பின்னால் ஈசன் கூறும் ரகசியம் ஒன்று உள்ளது. அதனை பலரும் அறிவதில்லை. நமது ஓம் நமசிவாய குழு மூலம் சிவபெருமான் கஞ்சா புகைப்பதற்கான உண்மையான காரணத்தைப் பார்க்கலாம்.
சிவபெருமானின் உருவம்
பிற கடவுள்கள் சொர்ண ஆபரணங்களில் திளைக்கும் போது ஈசனே தன் உடல் முழுவதும் பிணங்களை எரித்த சாம்பலை பூசியிருப்பார். கழுத்தில் நகைகளுக்கு பதில் பாம்பை சுற்றியிருப்பார், இடுப்பில் ஒரு தோலாடை மட்டுமே அணிதிருப்பார். சிவபெருமானின் உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு அர்த்தமும், மனித வாழ்க்கையுடன் தொடர்பும் உள்ளது. அதேபோலத்தான் அவர் கஞ்சா புகைப்பதற்கும் மனித வாழ்விற்கும் கூட தொடர்புள்ளது.
*புத்தியை மயக்கும் பொருள்*
கஞ்சா ஒரு புத்தியை மயக்கும் வஸ்து ஆகும். ஆன்மீகத்தில் புத்தியை மயக்கும் பொருட்கள் விழிப்புணர்வின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் அனைத்து போதையூட்டும் பொருட்களும் இதை ஏற்படுத்தும் என்று கூற இயலாது சுயஅறிதல் மிகவும் முக்கியமானதாகும். உலகத்தை நிராகரித்து, உயர்ந்த உண்மையைக் கோருகின்றவர்கள், போதைப்பொருட்களை எடுத்துக் கொண்டால், உயர்ந்த எண்ணங்களை அடைவார்கள்.
*மனிதனும், போதையும்*
ஒரு ஒழுக்கமில்லாத மனிதன் கஞ்சா அல்லது போதை பொருட்களை எடுத்துக்கொள்ளும்போது அவர் தவறான அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார். மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அர்த்தமே இல்லாமல் அவர்கள் நடந்து கொள்வார்கள். அவர்கள் மனதில் இருக்கும் அழுக்குகள்தான் போதையேறியபின் வெளியே வருகிறது. மற்றொரு புறம் ஒழுக்கமான ஒருவர் போதை வஸ்துவை எடுத்துக்கொண்ட பிறகு அவர்கள் மிகஉயர்ந்த சில எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள். அவர் தூய உலகிற்குள் நுழைந்தது ஆழமான கருத்துக்களை கூறுவார்.
*சிவபெருமான் ஆற்றலின் வடிவம்*
சிவபெருமான் ஏன் கஞ்சாவை புகைக்கிறார் என்று இப்போது நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் பார்க்கலாம். சிவபெருமான் உன்னதமான சக்தியாக இருப்பதால் அவருக்கு உணவோ, மதுவோ ஏன் மூச்சுவிட வேண்டுமென்ற அவசியமோ இல்லை. இருப்பினும் சிவபெருமான் கஞ்சா புகைப்பது போல கூறப்பட்டதன் காரணம் பிரபஞ்சத்தின் எந்த முரண்பாடுகளாலும் சிவபெருமானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உணர்த்ததான்.
அவர் எப்பொழுதும் உயர்ந்த எண்ணங்களுடனும், உயிரினங்கள் பற்றிய புரிதலுடனும் இருக்கிறார் என்பதன் அர்த்தம்தான் இது.
*கஞ்சா சிவனுக்கு போதையை ஒருபோதும் தராது*
கஞ்சாவால் சிவனுக்கு ஒருபோதும் போதை ஏற்படாது. அவருடைய சமநிலை எப்பொழுதும் மாறாது. சிவன் கஞ்சா புகைப்பதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்னவெனில் அது இந்த பிரபஞ்சத்தில் சூரியன் உதிப்பதை உணர்த்துகிறது. சூரியன் மிகவும் வலிமையானவர், அழுக்கான நீரிலிருந்து கூட தூய நீராவியை பிரிக்கும் வல்லமை வாய்ந்தது. அதேபோல சிவபெருமானையும் பாதிக்காது.
*உலகை பாதுகாப்பது*
சிவபுராணம் உட்பட பல புராணங்களில் கூறப்படும் சம்பவம் என்னவெனில் பாற்கடலை கடையும் போது வெளிப்பட்ட கொடூரமான விஷத்தை சிவபெருமான் உலகை காக்கும் பொருட்டு தான் ஏற்றுக்கொண்டார்.கடலில் இருந்து வெளிப்பட அந்த விஷத்தை வேறுயாராலும் தீண்டக்கூட முடியாது. அதனை சிவபெருமான் உலகத்தை காப்பாற்ற பருகினார்.
*ஆன்மீக அடையாளம்*
ஆலகால விஷமே எதுவும் செய்ய முடியாத சிவனை போதை வஸ்து என்ன செய்ய இயலும். சிவபெருமான் கஞ்சா பிடிப்பது போல உருவகப்படுத்தப்பட காரணம் அவர்தான் அனைத்திற்கும் மேலானவர் என்றும் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அவரின் சமநிலை எப்பொழுதும் மாறாது என்பதின் அடையாளம்தான்.
யோகிகளும், சித்தர்களும் இதனை தங்களின் ஆன்மீக அடையாளமாக கருதுகின்றனர். சாதாரண மக்கள் இதை புகைக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் உங்களின் பக்தியை காட்ட பல வழிகள் உள்ளது.
No comments:
Post a Comment