முதல் சித்தர் யார்?

மதுரையின் சோமசுந்தரக்கடவுளே முதல் சித்தனாக அவதரித்தார் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
இன்று நாம் அறிந்துகொண்டிருக்கும் சித்தர்கள் பலருக்கும் மூலகுருவாய் இருந்து ஞானத்தை போதித்திருக்கிறார்.இதனை அந்தந்த சித்தர்களின் பாடல்கள் மூலமாகவே அறியலாம்.
அவரது சித்து விளையாட்டுக்கள் பலப்பல.
இந்திர ஜாலம் போல் திடீரென்று பார்வையிலிருந்து மறைந்துபோவார்.
தூரத்திலுள்ள மலையை அருகில் வரச்செய்வார்.
அருகிலுள்ள மலையை தூரத்துக்கு போகச்செய்வார்.
முதியோரை இளைஞராக்குவார்.
ஆணை பெண்ணாக்குவார்.
பெண்ணை ஆணாக்குவார்.
சிறியவர்களை முதியவாரக்குவார்.
மலடியை மகப்பேறு உடையவளாக்குவார்.
கூன்,குருடு,செவிடு,ஊமை,முடம்,போன்றவற்றை பலரும் அறியும்வண்ணம் நீக்குவார்.
எட்டி மரத்தில் சுவை மிகுந்த மழங்களை பழுக்கச்செய்வார்.
சீசன் இல்லாத காலத்தில் ஆற்றில்நீர் பெருக்கெடுத்து ஓடச்செய்வார்.
மீண்டும் அந்த ஆற்றை வற்றச்செய்வார்.
இரவில் சூரியன் தோன்றச்செய்வார்.
வயோதிகர்களின் முதுமை மனைவிகளை இளமங்கையராக்கி கர்ப்பம் தரிக்க விபூதி கொடுப்பார்.
ஆகர்ஷணம்,ஆச்சரியம்,அஞ்சனம்,வசியம்,வாதம்,
வயத்தம்பம்,ஆகியவற்றைச்செய்வார்.
இவ்வாறு அளவில்லாத சித்து வித்தைகளை சோமசுந்தரக்கடவுள் சித்தர்வடிவில் திருவிளையாடலாக  புரிந்துகொண்டிருந்தார்.
மதுரை மன்னன் அபிஷேகப்பாண்டியனுக்கு இச்செய்தி எட்டியது.சித்தரை அழைத்து வருமாறு காவலர்களை அனுப்பிவைக்கிறான் மன்னன்.
சென்ற காவலர்கள் சித்தரின் வித்தையில் மயங்கிஅங்கேயே நின்று விட்டனர்.அவர்கள் வராத து கண்டு அமைச்சர்கள் சிலரை அனுப்பிவைக்கிறான் மன்னன்.
அவர்கள் சித்தரிடம் மன்னனின் அழைப்பைக்கூற
உமது மன்னனால் எனக்கு ஆகவேண்டியது என்ன?
என்று கூறி மறுத்து விட்டார்.அமைச்சர்கள் வந்து சேதியை சொல்ல மன்னன் தனது தவறை உணர்ந்தான்.நாம் சென்று அவரை காண்பது தான. முறை என்று திருக்கோயிலுக்கு சென்று மதுரை நாயகன் சோமசுந்தரக்கடவுளை வணங்கினான்.
பாண்டிய மன்னனின் உள்ளக்குறிப்பை அறிந்த சித்தன் வடமேற்கு திசையில் எழுந்தருளியிருந்தார்.
அரசன் அருகில் வருவது கண்டு எந்த வித மரியாதையும் காட்டாமல் அமர்ந்திருக்கும் சித்தரை அப்பால் போகும்படி காவலர்கள் துரத்தினர்.சித்தர்சிரித்தார்.அந்த சிரிப்பு மன்னனை சிந்திக்க வைத்த து.
பாண்டிய மன்னன் சித்தரை நோக்கி எழுப்பிய வினா?
உமது நாடு எது?
எந்த ஊர்?
என்ன பெயர்?
எதற்காக இங்கே இருக்கிறீர்?
சரமாரியாக கேள்வியை கேட்டார் மன்னர்.
அதற்கு சித்தர் அப்பா யாம் எந்த நாட்டிலும்,எந்த ஊரிலும் திரிவோம்.யாம் இப்போது இருக்கும் தலம் காசி மாநகரம்.வித்தைகள் பல செய்து செய்து திரியும் யாம் காடுகள் தொடங்கி ஆலயம் பலவற்றையும் தொழுவதற்கு இங்கு வந்துள்ளோம்.
மன்னனே உம்மிடம் பெற வேண்டியது ஒன்றுமில்லை"" புன்னகையுடன் அவரிடமிருந்து பதில் வந்த து.
சித்தரின் சக்தியை சோத்திக்கவேண்டும் என்று மன்னனுக்கு தோன்றியது.
அப்போது வேளாளன் ஒரு கரும்பினை கொண்டு வந்து வணங்கி நின்றான்.
மன்னன் அக்கரும்பினை கையில் வாங்கிக்கொண்டு சித்தரை நோக்கி வல்லவர்களில் உம்மை வல்லவராக நினைத்துக்கொண்டு இருப்பவரே இதோ இங்கே நிற்கும் கல் யானைக்கு இக்கரும்பை ஊட்டினால் நீர் எல்லாம் வல்ல சித்தர் என்பதை ஒப்பக்கொள்கிறேன்.இம்மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தர்க்கடவுளும் நீரே என்பதை ஒப்புக்கொண்டு நீர் விரும்பியதை அளிப்பேன் என்றான்.அங்கிருந்த மண்டப தூணில் கம்பீரமாக செதுக்கப்பட்டிருந்த கல்யானையின் மீது சித்தர் சற்றே கடைக்கண்ணால் பார்த்தார்.என்ன ஆச்சரியம்!!
பார்ததவுடனேயே அக்கல்யானை கண்ணைத்திறந்த து.வாய் திறந்து  பிளறி தம் தும்பிக்கையை நீட்டி மன்னன் கையிலிருந்த கரும்பை பற்றிக்கடைவாயில் வைத்து சாறு ஒழுகுமாறு மென்று தின்றது.மீண்டும் சித்தர் பார்க்க உடனே கல் யானை பாண்டிய மன்னனின் கழுத்தில் இருந்த முத்துமாலையை எட்டிப்பறித்த து.
எதிர்பாராத இந்த செயலை க்கண்டு சீற்றமடைந்த காவலர்கள் யானையை அடிப்பதற்குக்கோலினை ஓங்க கண்கள் சிவக்க யானையை பார்த்தார் சித்தர்.அவ்வளவு தான் உடனே கல்யானை அந்த முத்து மாலையை விழுங்கிவிட்டது.சித்தரின் மேல் மன்னனுக்கு கடுங்கோபம் ஏற்பட்டு விட்டது.அரசனின் மெய்க்காப்பாளன் சித்தரை அடிக்க வந்தான்.சித்தர் புன்னகை புரிந்தவாறே அவனை கையமர்த்தி நில் என்று கூற மெய்க்காப்பாளன் உட்பட காவலர் அனைவரும் அசையாது அப்படியே கற் சிலை போல் நின்ற விட்டனர்.இதைக்கண்ட பாண்டிய மன்னன் சித்தரின் திருவடிகளில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.
*மனமிரங்கியசித்தர்உமக்கு வேண்டியவரத்தைக்கேள் என்றார்.*
*தனக்கு புத்திர பாக்கியம் அளிக்கவேண்டும் என்று வணங்கித் தொழ அப்படியே ஆகட்டும்*
 என்று அருள் புரிந்து தமது திருக்கரத்தை யானையின் மேல் வைத்தார்.உடனே கல்யானை தனது துதுக்கையை நீட்டி முத்து மாலையை பாண்டிய மன்னனிடம் கொடுத்தது.முத்து மாலையை பெற்றுக்கொண்டு திரும்பிய மன்னனின் பார்வையிலிருந்து சித்தர் மறைந்தார்.ஆம் சித்தரை அங்கு காணவில்லை,யானை திரும்பவும் கல் யானை வடிவத்திற்கு மாறி விட்டது.இவையெல்லாம் இறைவனின் திருவிளையாடலே என்று உணர்ந்து சோமசுந்தரக்கடவுளை மீண்டும் வந்து வணங்கி விட்டு அரண்மனைக்கு வந்தான்.
சித்தரின் அருளால் மன்னனுக்கு விக்ரமன் என்னும். புதல்வனுக்கு தந்தையாகும் பாக்கியம் கிட்டியது.நீண்ட நாள் அரசாட்சி செய்து விட்டு பின்னர்  சித்தரின் திருவருட் பார்வையில் விளைந்த
பேரின்பத்தில்இரண்டற கலந்து விட்டான் மன்னன்.
இறைவன் சித்தராக வந்து பாண்டின் கூறியதன் பேரில் கல்யானைக்கு கரும்பு கொடுத்த நிகழ்ச்சி
கரும்பருத்தியப்படலமாக குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...