சனிபகவானின் பூரண ஆசிகள் பெற எளிய வழிகளில் ஒன்று அவருடைய மனைவிகளை வழிபடுவது மட்டுமே. சனிபகவானுக்கு மொத்தம் எட்டு மனைவிகள் உள்ளனர்.
நமக்கு கிடைக்கப்பட்ட தகவல்களின் படி அவர்களின் தமிழ் பெயர்கள்:
• துவாஸுனி
• தாமினி
• ஹங்கிலி
• ஹாலப்பிரியா
• காந்தாஹி
• துர்கண்டி
• மஹிஸி
• அஜா
சனிபகவானை வழிபடும்போது அவருடைய மனைவிகளின் இந்த பெயர்களைச் சொல்லியும் வழிபடலாம். சனிக்கிழமைகளில் இந்த மாதிரியான வழிபாடு செய்வது நமக்கு சிறந்த பலனை அளிக்கும். இம்முறையில் வணங்கும்போது சனிபகவானின் கோவப் பார்வை குறையும்.
சனி பகவான் சூர்யதேவ் (சூரியன்) மற்றும் அவருடைய மனைவி சாயாவின் மகன். சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன். தனது சிறுவயதிலிருந்து இப்பொழுது வரை தனது பெரும்பாலான நேரத்தை சிவபெருமானை நினைத்து தவம் செய்வதையே கொண்டிருந்தான்.
சனிப் பார்வை என்பது சனிபகவானுக்குக் கிடைக்கப்பட்டச் சாபம் என்கின்றனர். இதுக் குறித்து நமது ஓம் நமசிவாய குழுவின் சிறு விளக்கங்கள்.
சனி பகவான் சித்ராதன் என்பவரின் மகள் தாமினியின் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சிறிது காலத்திலேயே தாமினிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றும் ஆசை பிறந்தது. இந்த ஆசையின் காரணமாக சிவபெருமானே நினைத்து தவம் செய்து கொண்டிருந்த சனிபகவானிடம் முறையிடவே அந்த தவத்தின் காரணமாக சனி பகவான் வேண்டுதலை ஏற்க மறுக்கிறார்.
இத்தகையச் செயலால் பெரும் கோபம் கொண்ட தாமினி சனிபகவானுக்கு சாபம் கொடுக்கிறார். "நான் விரும்பிய போது என்னை கவனிக்காத உன்னை, (சனிபகவான்) இனி யார் பார்த்தாலும் அவர்களுக்கு அழிவுதான்" என்னும் சாபத்தினை கொடுக்கிறாள். மேலும் "எப்பொழுதும் உங்களைச் (சனிபகவானை) சுற்றி எதிர்மறையான விளைவுகள் தான் ஏற்படும்" என்னும் சாபத்தையும் கொடுக்கிறாள் தாமினி.
இந்த காரணத்தினாலேயே சனிபகவானை வணங்குவதற்கு முன்பாக அவரது மனைவியை வணங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் சனி பகவான் தன் பக்தர்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்து தன் தலையைச் சற்று சாய்த்துக் கொண்டு கீழ் நோக்கி இருக்கும்படி தன்னை மாற்றிக் கொண்டார்.
சனி பகவானின் பார்வை நம் மீது படுகிறது என்றால் அது நமது வாழ்வில் சிறு பாடங்களை எடுத்துரைப்பதற்காக மட்டுமே, நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்கள், நமக்கு எவ்வாறு உண்மையாக இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொள்வதற்காகவும் இருக்கலாம்.
No comments:
Post a Comment