நம் உடலில் பஞ்சபூதம் மண்ணீரல், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் எனஐந்து உறுப்புகளை இயக்குவது போல் நம் சுவாசத்திலும் பஞ்சபூத தன்மை உள்ளது.
மூக்கின் துவாரத்திலிருந்து வெளிப்படும் சுவாசமானது
2 - இன்ச் வெளிப்பட்டால் - ஆகாய சுவாசம்
4 - இன்ச் வெளிப்பட்டால் - காற்று சுவாசம்
6 - இன்ச் வெளிப்பட்டால் - நெருப்பு சுவாசம்
8 - இன்ச் வெளிப்பட்டால் - நீர் சுவாசம்
10 - இன்ச் வெளிப்பட்டால் - நில சுவாசம் நடக்கும்.
ஆகாயசுவாசம் - அதி உத்தமம் - சத்துவகுணம்
காற்று சுவாசம் - உத்தமம் - சத்துவ குணம்
நெருப்பு சுவாசம் - மத்திமம் - ராஜச குணம்
நீர் சுவாசம் - மந்தம் - தாமச குணம்
நில சுவாசம் - அதி மந்தம் - தாமச குணம்
மனிதன் மன அமைதியுடன் இருக்க ஆகாய, காற்று சுவாசங்கள் செய்ய வேண்டும்.
சுறுசுறுப்பாய் இயங்க நெருப்பு சுவாசம் செய்ய வேண்டும்.
மற்ற நீர், நில சுவாசங்கள் அறிவு மந்தத்தை உருவாக்கும்.
நிலம் - உடல்
நீர் - மனம்
நெருப்பு - புத்தி
காற்று - சித்தம்
ஆகாயம் - அகங்காரம்
நில தன்மை உடலிலும் சுவாசத்திலும் அதிகரித்தால் உடலாகிய அன்னமய கோசம் பாதிப்படையும்.
நீரின் தன்மைக்கான சுவாசம் அதிகரிக்கின் மனதால் இயங்கும் ( உணர்வு) மனோமய கோசவுடல் பாதிப்படையும்
நெருப்பு சுவாசம் அதிகரிக்கின் புத்தியால் ( பகுத்தறிவு) இயங்கும் விஞ்ஞானமய கோசவுடல் பாதிப்படையும்
காற்று சுவாசம் அதிகரிக்கின் சித்தத்தால் (சிந்தனை) இயங்கும் பிராணமய கோசவுடல் பாதிப்படையும்.
ஆகாய சுவாசம் அதிகரிக்கின் அகங்காரத்தால் ( எண்ணம்) இயங்கும் ஆனந்தமய கோசவுடல் பாதிப்படையும்.
ஒருவருக்கு நோய்வரின் பஞ்சபூத சுவாச தன்மையில் பாதிப்பு ஏற்படின் அதற்கான உடலில் பாதிப்பு ஏற்பட்டு இறுதியாக அன்னமய கோசவுடலில் நோயாய் வெளிப்படும்.
நோயாளியின் சுவாச தன்மையின் பாதிப்பை ஆராய்ந்து பஞ்சகோச உடலில் எந்த உடல் பாதிப்பு அடைந்திருக்கிறது என்பதனை ஆய்ந்து அதற்கான மருத்துவம் பார்க்கின் நோயாளி நலமடைவார்.
No comments:
Post a Comment