ஒருவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விட்டது என அர்த்தம். ஏனெனில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தால் எளிதில் நோய்கள் நம்மை தாக்கும். எனவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றியும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் இங்கு காண்போம்.
அனைவருக்கும் சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுவது இயல்பு. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏற்பட்டால் பிரச்சனையில்லை, அதுவே மாதத்திற்கு ஒருமுறை என ஒவ்வொரு மாதமும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும்.
உடலில் வெள்ளை அணுக்கள் குறைவதால் தான் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது.
ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தம் கசிவது, அடிக்கடி வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் சிறு தொற்றுகள் போன்றவையும் நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் குறைந்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.
நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தால் விரைவில் உடல் சோர்வடைந்துவிடும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க #செய்ய_வேண்டியவை
சர்க்கரைக்கு பதிலாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டுச்சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
தினந்தோறும் 8 முதல் 10 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்வது அவசியமாகும். ஆனால் இன்று பலரும் இதைச் செய்வதில்லை. எனவே உங்களின் வேலைகளை திட்டமிட்டு செய்து, உறங்குவதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.
ஓடியாடி வேலை செய்ய உடல்நலம் மிகவும் அவசியம். உடல் நலமுடன் இருக்க ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
நாம் பருகும் தண்ணீரிலும் நம் ஆரோக்கியம் பாதிப்படையும். எனவே சுத்தமான தண்ணீரைப் பருகுங்கள். தினந்தோறும் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரைப் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது.
அன்றாட உணவில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும், பழங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டிற்கான காரணங்கள்
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாமல் இருப்பது.
உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது.
அதிகமான மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.
இது போன்ற பல காரணங்களால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகின்றனர். எனவே இவற்றைத் தவிர்த்து நலமுடன் வாழுங்கள்.
No comments:
Post a Comment