நம் முன்னோர்கள் கூறிச்சென்ற அறிவியல் உண்மை... பொய்யாகாது!!
மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்?
நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களில் பல நன்மைகள் இருக்கின்றன. இந்த காரணத்தினால் தான் அவர்கள் இயற்கையாக மருந்துகளை பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்றால் மிகையாகாது.
🐄 அப்போதெல்லாம் தடுப்பூசியோ, மருந்து மாத்திரையோ நம் முன்னோர்கள் பயன்படுத்தவில்லை. காரணம் மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால் அது ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது காணும் இடம் எல்லாம் கான்கீரிட் தான். மண்தரையை பார்ப்பதே அரிதாகி விட்டது.
🐄 அந்த காலத்தில் மண் தரையில் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை காலணிகள் இல்லாமல் மண் தரையில் காலை வைக்க யோசனை செய்கிறோம்.
🐄 அறிவியலின் படி, மாட்டு சாணத்திற்கு இணையான மருந்து எதுவும் இல்லை என்பது தான் உண்மை. 18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம்.
🐄 மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், கிருமிகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது. நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது. அந்த கிருமிகள் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.
🐄 விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும், வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின், நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
🐄 ஏனென்றால், மாடு சாணம் விஷத்தின் தன்மையை எடுத்துக் கொண்டு, பின் விஷத்தை நீக்கி நல்ல உணர்வின் தன்மையை வெளிப்படுத்துகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.
🐄 ஆனால் பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment