*மூலமந்திரம்*
காளி சொரூபத்தை மனதினால் தியானித்து ஓம் நமோ பகவதி காளி சாமுண்டி தேவி பைரவிதேவி ஓங்கார நீலி சத்தி மம வசமாயிருக்க சுவாஹா.
*பூசை விபரம்*
இந்த மந்திரத்தை தினம் மூன்றுவேளை ஸ்நானம் செய்து .மஞ்சள் வஸ்திரம் தரித்து சுத்தமான இடத்திலிருந்து ஏழு நாளைக்கு 10008 உரு செபிக்க வேண்டும். ஸ்திரீகள் முகம் பார்க்கப்படாது.ஏழு நாளும் தானே சமையல் செய்து சாப்பிட வேண்டும். தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். இந்தப்படி சுத்தமாயிருந்து செபிக்கச் சித்தியாகும்.
பின் ஒரு அமாவாசை தினத்தில் கருங்காலி மரத்திற்கு பூஜைகள் செய்து கருங்கோழி பலிகொடுத்து. மரத்தின் அடியில் உள்ள ஆனி வேர் அல்லது வடக்கு போகும் வேரை காப்புக்கட்டி எடுத்து அதில்தான் மந்திரக்கோள் தயார் செய்யுங்கள். ( அதாவது கருங்காலி கனமான வேரை எடுத்து ஒரு அடி நிலத்திற்கு உருண்டை யாக செய்து மத்தியில் தொலையிட்டு வைக்கவும்) பின் செவ்வாய்க்கிழமை தினம் குன்றிமணி செடிக்கு மஞ்சள் நூல் காப்புக்கட்டி பொங்கலிட்டு பலிகொடுத்து வேர் அறாது கொண்டுவந்து அதன்மேல் ஐங்கோலக் கருவும் அட்டமாசித்திமையுந் தடவி கருப்பு நூல் சுற்றி மஞ்சள் குங்குமம் வைத்து பிறகு ஓன்பது நாள் வரைக்கும் மந்திரத்தை செபித்து எந்திரம் சேர்த்து கருங்காலி கட்டையில் அடைத்து இரு பக்கமும் அடைத்து. காளி தேவியின் ஆலயத்தின் பின்புறம் புதைத்துவிட்டு வீட்டிற்கு வரவும் ( காளி கோவில் கிடைத்ததா போது மயானத்தில் செய்யலாம.)
இராத்திரி 9மணிக்கு ஸ்நானஞ்செய்து விபூதி தரித்து மடிகட்டிக் கொண்டு அனுட்டான முடித்து ஒரு சுத்தமான இடத்தில் பலகை ஆசனமிட்டு ஒரு மண் தோண்டிக்கு நூல் சுற்றி அதில் சுத்தமான தண்ணீர் நிறைய நிரப்பி மஞ்சள் கரைத்து வேப்பிலை வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து புஷ்பஞ் சாத்தி மேற்படி கும்பத்திற்கு முன்பு மேற்கண்ட (இருச்சக்கரங்களை 1 தாயத்து 2 மந்திரம் கோள்) சக்கரத்தை வெள்ளித் தகட்டில் வரைந்து வைத்து அதற்கும் அஷ்டகர்ம மை தடவி குங்குமம் சந்தனம் புஷ்பஞ்சாத்தி வாழை இலையில் அவல்,கடலை,தேங்காய், பழம்,சர்க்கரை,வெற்றிலை பாக்கு, பால் நைவேத்தியம் செய்து சாம்பிராணி வத்தி கொளுத்தி வைத்து தூபதீபங்கொடுத்து செவ்வரளிப் புஷ்பத்தால் கீழ்க்கண்ட மூலமந்திரம் 1008உரு விதம் ஒரு மண்டலம் ஜெபித்து வரச் சித்தியாகும். பூஜை துவக்குந்தினமும் முடிவாகுந் தினமும் மேற்கண்டபடி பூஜை செய்து மற்ற நாட்களில் பால் ,சர்க்கரை, வெற்றிலைபாக்கு,சாம்பிராணி வத்தி,கற்பூரம் வைத்து பூசிக்கவும்
*மூலமந்திரம்*
ஓம் காளி ஓம் பிடாரி ஓம் நமசிவாய ஸ்வாஹா.
*மாலா மந்திரம்*
வாள் மீதில் ஓடி மீளும் வாலசூல பத்திரகாளி இன்னாள் மீதில் ஓடிமீளும் ஓம் நமசிவய வடிவுள்ள மரகதமேனியும் விரித்தசடையும் மேல் நோக்கிய முகமும் கைறித்த பார்வையும் கூரிய மூக்கும் சிவந்த பல்லும் காதில் ஓலையும் கழுத்தில் மங்கிலியமும் பூதப்படையுடனே வந்து முன்னே நில்லு தேடிய பேரைச் சிந்தை கலைத்திடு கருதிய பேரைக் கட்டிப்பிடித்திடு எடுஎடு பிடிபிடி என் காலின் கீழ்கொண்டு வந்து தாக்க ஸ்வாஹா. என்று பதினாறு தரம் முதலில் ஜெபித்து பின்பு மேற்கண்ட மூலமந்திரத்தை ஜெபிக்கவும். பூஜை முடிந்ததும் கோவிலில் புதைத்த இடத்தில் பூஜைகள் செய்து மந்திரக்கோளை கைவசம் வைத்து கொண்டு அருள் வாக்கு, ஜாலம், புதையலை அடைவது, அஷ்டகர்ம என அனைத்து வித்தைகளும் ஆடலாம்.
காவிகள் பாடத் திறமையுண்டாகும்.சந்துரு கிடையாது .பேய் பிசாசு முதலியவை யாவும் உபாசித்தவர் பெயர் சொன்னாலும் ஓடிவிடும். சகல சம்பத்து முண்டாகும்.இஷ்ட காரிய சித்திமிகும்.வாக்கு விசேஷமுண்டாகும்.சத்துருநாசமாவார்.புத்திமான்கள் இதைக்கொண்டு வேண்டிய காரியம் செய்ய இடங்கிடைக்கும்.
முன்னோர்கள் வழிபாடு
குலதெய்வம் வழிபாடு
முதல் கடவுள் கணபதி வழிபாடு
குரு வழிபாடு
சக்தி சிவன் வழிபாடு
அகத்தியர் வழிபாடு
செய்து விட்டு பூஜைகள் செய்வதுதான் முழுமையாக வெற்றிகரமாக சித்தியாகும். காளி தேவியின் தரிசனத்தை காணலாம்.
No comments:
Post a Comment