குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது.

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. .

பல வீடுகளில் எங்கு எல்லாம் கோவிலுக்கு போகிறார்களே அங்கு எல்லாம் இவர்கள் ஒரு சாமி படத்தையும் விடாமல் வாங்கி வந்து மாட்டிவிடுவார்கள். இன்னும் சில வீடுகளில் ஏகப்பட்ட சிலைகளை வாங்கி வந்து வைத்திருப்பார்கள்.

பூஜை அறைகளில் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். வீட்டில் சுலபமாக எவ்வாறு பூஜை செய்வது என்பது குறித்து நமது ஓம் நமசிவாய குழுவின் அடுத்த பதிப்பில் பதிவிடுகிறோம்.

உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் படம் இருக்கலாம். அதிகமாக கடவுள் படத்தை மாட்டிவைக்காதீர்கள். எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைத்துக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும்.

கோரமாக இருக்கும் தெய்வங்களின் படங்களை வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.நீங்கள் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள். வீடுகளில் சிலை இருக்ககூடாது.

"நீங்கள் எவ்வளவு கடவுளை வழிபட்டாலும், குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில், ஒரு திருப்தி இருக்காது."

பல சாமி படங்களை வைத்து இருக்கும் வீடுகளில், குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள்.

பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அமருங்கள் உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.

பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...