கலசத்தை பூஜிப்பது ஏன் ?

கலசம் என்பது கும்பம். கும்பத்தில் நீர் நிரப்பி ஒரு தேங்காயை வைத்து கும்பத்தை சுற்றி நூல்களால் கட்டப்படும் புனித கும்பமே கலசம். இந்த நீருக்கு அதிக சக்தி உண்டு.

கங்கையின் புனிதம் நிறைந்த நீர் போல் இந்த கலசத்தில் இருக்கும் நீருக்கு புனிதம் அதிகமாகும். கலசத்தை பூஜிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார்.

கலசத்தில் உள்ள புனித நீரானது அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும், வடிவங்களையும் உயிர்த் துடிப்பும், உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியை தன்னுள் அடக்கியுள்ளது.

கலசத்தில் உள்ள இலைகளும், தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நுல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கோவில் கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது.

அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது.
இந்த அற்புத நீர் நம்மீது படும்போது நமது ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் கூடும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...