இன்றய கோபுர தரிசனம்: அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ மாதவிவனேஸ்வரர் திருக்கோயில், திருமுருகன் பூண்டி, திருப்பூர் மாவட்டம்.
( கொங்கு நாட்டில் சிறப்புமிக்க சிவாலயங்களில் கேது பகவான்,(பரிகார ஸ்தலமும் கூட) சிவபெருமானை வழிபட்ட இத்தலமும் ஒன்று. இந்த சிவனாலயத்தை, சுந்தர மூர்த்தி சுவாமிகள் 'பூண்டி மாநகர்' (திருமுருகன் பூண்டி) என திருவாசகத்திலும், அருணகிரிநாதர் 'கொங்கு ராஜபுரம்' என திருப்புகழிலும் குறிப்பிட்டுள்ளனராம். முற்காலத்தில் மாதவிவனம் எனும் பெயரால் அழைக்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. முதல் பூஜை இத்தல மாதவிவனேஸ்வரருக்கும், அடுத்த பூஜை அருகிலிருக்கும் புகழ்பெற்ற ஸ்ரீ முருகநாத சுவாமிக்கும் இன்றும் நடந்து வருவதன் மூலம் இந்த ஆலயத்தின் பழமையை உணரலாம். பொதுவாக கோயில் நுழைவாயிலில் ராஜகோபுரம் இருக்கும். ஆனால், இந்த ஆலய நுழைவு வாயில் மேல்தளத்தில் நந்தியப்பெருமான் பெரிய அளவில் ஈசனை நோக்கி வீற்றிருக்கிறார். கருவறையில் மாதவிவனேஸ்வரர் நாகாபரணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சியளிக்கிறார்.)
No comments:
Post a Comment