• சிவபெருமானை வழிபடும் சைவ நாயன்மார்களின் சின்னமாகவும், முக்கியமானதாகவும் அமைவது விபூதி.
• பஷ்மம், ரக்ஷை, திருநீறு மற்றும் விபூதி என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுகிறது.
விபூதி என்பதன் பொருள் :
• இறையருள் பெற்றது
• உயர்விலும் உயர்வானது,
• முழுமையானது,
• எங்கும் நிறைந்திருப்பது,
• உள்ளத்தை தூய்மைப்படுத்துவது,
• வணங்கத்தக்கது,
• செழுமை நிறைந்தது,
• வளங்களைத் தரக்கூடியது,
• சித்திகளைத் தருவது,
• வேண்டும் வரங்களைத் தருவது,
• அலங்கரிப்பது.
சிவபெருமானின் திருமேனி முழுவதும் அலங்கரிக்கக் கூடிய ஒரே பொருள் விபூதி மட்டுமே.
விபூதி மனித வாழ்க்கையில் பலவிதமான தத்துவங்களை எடுத்துரைக்கிறது.
இறந்தபின் அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது.
உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால் ஆன்மாக்கள் தூய்மையடைகின்றன.
வேதங்களும, உபநிஷதங்களும், புராணங்களும், தமிழ்த் திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப் பறைசாற்றுகின்றன..
மேலும், முடிவில் எல்லாம் ஒரு பிடி சாம்பல் என்பதை உணர்த்துகிறது.
No comments:
Post a Comment