இறைவனுக்கு பூஜைகள் செய்து இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்


கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவனின் சிலையை, படத்தை  துடைத்து, அபிஷேகம்  பண்ணி,  பூவாலும், சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் செய்து இறைவன்  பவனி வரும் பல்லக்கு தேர் போன்றவற்றையும் நாம் ஏன் அலங்காரம் செய்கிறோம்?

இறைவன் நம்மை கேட்டானா ? என்னை அலங்காரம் செய் என்று... இறைவன் நம்மிடம் கோரிக்கை வைத்தானா இல்லையே...! பின் எதற்கு இந்த அலங்காரம்?

மனித மனம் அலைபாயக்  கூடியது.
ஒரு  இடத்தில் நிலைத்து நில்லாதது. அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் மனக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதில் வருவது  இல்லை. முதலில் மனது  ஒன்றின் மேல் படிய பதிய வைக்க வேண்டும். மனம் அதில் லயிக்க வேண்டும். அதிலேயே மனம் கலக்க வேண்டும். அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம். அதனால் தான் கோவிலை நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி  அமைத்தார்கள்.

காதுக்கு இனிமையாக  பாடல்கள், நாதஸ்வரம், சொற்பொழிவுகள் என்றும், மூக்குக்கு இனிமையாக  கற்பூரம், ஊதுபத்தி, மலர்கள் என்றும், நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும், உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும், கண்ணுக்கு இனிமை தர கோவில்  சிற்பங்கள், பெரிய  கோபுரங்கள், அழாகன மூர்த்தி  வடிவங்கள் என்று அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று  வைத்தார்கள்.

இறைவனை எவ்வளவுக்கெவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் கண்ணுக்கு  இனிமை. உதாரணமாக
நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து  பார்த்து மகிழ்கிறோம் அல்லவா.? அது போல... அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ. மனைவிக்கு பட்டுச் சேலை வாங்கித் தந்து அழகு  பார்ப்பது போல அவளுக்கு நகை அணிவித்து அழகு பார்க்கிறோம்.

இப்படி அழகை இரசிக்கும் போது
மனம் லயிக்கிறது. மனம் ஒன்று  படுகிறது. மனதில் ஆவல்  எழுகிறது.
ஒன்றை ரசிக்கும் போது ரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி அமர்ந்து கொள்கிறோம். கண்ணை மூடி ரசிக்கிறோம்... அது சிறந்த உணவாக  இருக்கட்டும், சிறந்த இசையாக இருக்கட்டும், நல்ல நறுமணமாக இருக்கட்டும், ரசனையின் உச்சம் கண் மூடி உள்ளுக்குள் அதை அனுபவிக்கிறோம்..

அதைப்போல இறைவனை, அவன் உருவத்தை சிங்காரம் பண்ணி பார்க்கும் போது  அதில் லயித்து அதை அப்படியே மனதில்  காண்போம்.
அது தான் தியானம். உருவத்தில் இருந்து உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம்.

உன்னைச் சிங்காரித்து
உன்னழகைப் பாராமல்....
என்னைச் சிங்காரித்து
இருந்தேன் பராபரமே.....!

உண்மை உணர்ந்தவர்கள்
இறைவா உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் என்னை சிங்காரித்து கொண்டு இருந்து விட்டேனே என்கிறார்.

அன்பர்களே நீங்களே சிந்தியுங்கள்
எது அழகு என்று?

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...