அதிக சர்க்கரை, நரம்புகளுக்கு நேரடியாக செல்லும். இன்சுலின் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்க்கரை நரம்புகளுக்கு சென்று கொண்டே இருக்கும். அடிக்கடி ஏ றி இறங்கும் சர்க்கரை, ரத்தத்தில் மட்டுமல்ல நரம்புகளிலும் ஏறி, இறங்கும். இதனால் நரம்பு பாதிப்பு, சர்க்கரை உள்ளவர்களுக்கு அடிக்கடி நிகழ்கிறது.
கால் நரம்பு பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள்
கால் எரிச்சல், மதமதப்பு, கால் வலி, பஞ்சு மேல் நடப்பது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, மரத்துப் போதல், கணுக்கால் வலி, காலில் ஏதோ ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. இதேபோல், மூளைக்கு செல்லும், நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் மூளை பாதிக்கப்படும்.மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உண்டாகும் அறிகுறிகள்சுய நினைவின்மை, மறதி , கவனக்குறைவு, வாதம், ஒரு பக்கம் கைகால் மரத்துப் போதல், பக்க வாதம், மயக்கம். நீண்ட நாட்கள் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், தானியங்கி நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
சர்க்கரை கட்டுப்பாடு என்றால் என்ன?
வெறும் வயிற்று சர்க்கரை, 120 மி.கி., கீழ், சாப்பிட்ட பின் சர்க்கரை, 160 மி.கி., கீழ். HbA1c மூன்று மாத கால சர்க்கரை கட்டுப்பாடு, 6.5 சதவீதத்துக்கு கீழ் இருக்க வேண்டும். அடிக்கடி சர்க்கரை ஏறி, இறங்குபவர்களுக்கு பாதிப்பு அதிகம். உதாரணம், வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு, 100 மி.கி., சாப்பிட்ட பின் சர்க்கரை, 280 மி.கி., இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இரண்டிற்குமிடையே வித்தியாசம், 40 மி.கி., மேல் இருக்கக் கூடாது.இதற்கு உணவு முறையில் மாற்றம் செய்வது முக்கியம். அதாவது காலை உணவில் ஒன்று அல்லது, இரண்டு இட்லியை குறைத்து, காய்கறி மற்றும் பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மதிய உணவில் மூன்றில் ஒரு பங்கு சாதத்தை குறைத்து கீரை கூட்டு, பொரியல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு உணவில் ஒன்று அல்லது இரண்டு சப்பாத்தியை குறைத்து, சுண்டல் ம ற் று ம் காய்கறி சேர்த்துக் கொள்ளவும்.
உடற்பயிற்சி, 60 சதவீதம் சர்க்கரையை குறைக்கிறது. தினமும் ஐந்து கி.மீ உடற்பயிற்சி சர்க்கரையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்நாளை அதிகப்படுத்துகிறது. நீங்கள் சரியாக இருந்தாலும் மாத்திரை பொருத்தமாக இருக்க வேண்டும். பலர் சரியாக சாப்பிடுகிறார்கள். தினமும் வாக்கிங் செல்கிறார்கள். ஆனால், அவர்கள் சாப்பிடும் மாத்திரை பெரியளவு வீரியம் இல்லாததால் அல்லது நீண்ட நாள் ஒரே மாத்திரை சாப்பிடுவதால், சர்க்கரை கட்டுப்பாட்டில், இல்லாமல் இருக்கலாம். யாருக்கு என்ன குறை என, கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
யாருக்கு கால் பாதிப்பு ஏற்படுகிறது?
அதிக எடை, நீண்ட கால சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால், அதிக ரத்த அழுத்தம், உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாதவர்கள், புகைபழக்கம் உள்ளவர்களுக்கு கால்பாதிப்பு ஏற்படலாம். கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை, கால்களை மட்டும் பாதிப்பதல்ல. கால் பாதிப்பின் அறிகுறிகள் உள்ளவர்கள் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டையும் அறிவது அவசியம். ஓரிடத்தில் பாதிப்பு இருந்தால், பிற உறுப்புகளுக்கும் செல்ல வாய்ப்புண்டு. அதைத்தடுக்க முழு உடல் பரிசோதனை உதவும். முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள முடியாதவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று அவசியமுள்ள பரிசோதனைகள் மட்டும் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment