வசித்துவம்

வசித்துவம். .

ஆய அறுபத்து நான்கு கலையில்
இதுவும் ஒரு கலை. ..

மூலிகை கொண்டு
மூச்சை வசப்படுத்தும்  கலையோ
இது
தேவ ரகசியம் அறிந்து
தேனில் கலந்து
தெகட்ட திண்ண வரும் கலையோ
இந்திர லோகம் சென்று
இந்திரனின் அமிர்தம்
உண்டு உருவாகும் கலையோ
சித்தர் வாசகம் அறிந்து
சித்த பாசனம்
சிரசு அறியும் கலையோ
மை கொண்டு தடவி
மயங்க வைக்கும் கலையோ
....
இது எல்லாம்
யோகி க்கு கை கூடும் கலையோ
....
சாமாண்யன் கைக்கு
வசித்துவம் வருவது
யார் அறிவாரோ. ..
...
வசித்துவம்
வசி வசி யாக வசப்பட
மந்திரம் தந்திரம் தேவையோ. .
...
இந்திரனின்
அமிர்தம் உண்டாலும்
வருவதில்லை வசித்துவம். .
....
ஆதி சிவனின்
அருளாலே
அவன் செய்த ஒரு செயலே
வசித்துவம். .
அது
..
உலகம் உனக்கு கொடுக்கும்
நஞ்சு உண்ண வேண்டும்
அதற்கு
ஈடாக
அமிர்தம் நல்க வேண்டும்
அதே உலகத்திற்கு ...
.....
வசித்துவத்தின்
முதல் பாடம் இது .
...
உனக்கு
உலகம் செய்யும் கெடுதலை
உள் வாங்கி
நல் அஸ்தி அனுக வேண்டும்
உலகிற்கு ..
....
ஏன்
என ஞானமும் பெற்று
விஷம் தாங்கும்
வலிமை பெற்று
இன்னல்கள் தாங்கும்
இதயம் பெற்று. ..
.....
இரண்டாவது பாடம்
கூடு விட்டு கூடு பாயும்
கூத்தை அறிய வேண்டும் நீ. .
...
கூடு விட்டு கூடு பாய
மந்திரம் தேடாதே
காண கிடைக்காது அது. ..
....
கூடு விட்டு கூடு பாய
நல் இதயம் வேண்டும்
...
மற்ற உயிரை
உனது உயிராக எண்ணுவது
மற்றவர்கள் துயரை
உனது துயராக மதிப்பது
மற்ற ஜீவராசிகள் பசியை
உனது பசியாக உணர்வது
மற்றவர்கள் வலியை
உனது வலியாக எண்ணுவது
மற்றவர்கள் சிரிப்பை
உனது சிரிப்பாக சிறப்பிப்பது
இதுவே
உண்மையான
கூடு விட்டு கூடு பாயும் கலை
...
அன்பால்
கூடு விட்டு மற்ற உயிரினங்கள் மீது
நீ பாயும் போது
பிரம்மம் தனது கூட்டை
உனது கூட்டுக்குள்
கொண்டு வருவது திண்ணமே. .
...
மூன்றாம் பாடம்
சுயநலமில்லா இதயம்
பேராசை அற்ற சிரசு
உழைத்து உயிர்க்கு
கொடுக்கும் எண்ணம். ..
....
நான்காம் பாடம்
..
பேசும் மொழி விடுத்து
மௌன மொழி அறிதல்
....
ஐந்தாவது பாடம்
...
பஞ்ச பூத சக்தியை
உண்ண தெரிந்த கலை
அதுவே உணவு
என்ற நிலை ...
....
அங்கே
கிடைக்கும்
கோடான கோடி
பிராண சக்தி
உயிர் சக்தி
உன்னை
வலிமையாக்க
உடலை செழிமையாக்க
முகத்தை பிரகாசமாக்க..
உணவுக்காக
உடல் வருந்தாது
பசி பிணியை அறுக்க. ..
....
பசி பிணி அறுத்தவனுக்கு
உடல் வலிமை பெற்ற வனுக்கு
உலக சொத்து ஏதும் தேவையோ  ???
....
கற்ற ஞானத்தை கொடுக்க
உழைத்த செல்வத்தை கொடுக்க
பிறந்த அன்பை
எதிர் பார்ப்பில்லாமல்
சிவார்ப்பணம் ஆக கொடுக்க
வசப்படும் வசித்துவம்
...
வசப்படும் உயிரினம்
புலப்படும்
பறவை மொழி
தென்படும் தேவ கீதம்
பிரம்பமும்
சிவமும்
வசப்படும் வசித்துவமாகவே உம்மிடம்
....
வசித்துவம்
...
வ. .வரும்
சித்து. ..சித்து
வம்   ....வரும்..
...
சித்து வந்தும்
சிதராத சிரசிலே
சிவன் வருவான். .
அகிலமூம் வசப்படும்
...
அன்பே
அன்பே
வசித்துவம். .
...
வசித்துவம் இதுவே. .
...
ஓம் நமசிவாய
சம்போ மகா தேவா
சம்போ மகா தேவா. ..

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...