ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், (சமீவனம்)

அருள்மிகு (ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், (சமீவனம்)
எண்கண் , திருவாரூர் மாவட்டம்.

( தன் சிருஷ்டி தொழிலை, 'எனை ஆளும் ஆண்டவன்'  எம்பெருமான் முருகனிடத்திலிருந்து திரும்பப்பெற, பிரம்மன் எட்டு கண் கொண்டு சிவபெருமானை பூஜித்து, ( தன் தந்தையின் விருப்பத்திற்க்கிணங்க, முருகப்பெருமான் 'பிரணவ மந்திரத்திற்கு'  இத்தலத்தில்தான் பிரம்மனுக்கு விளக்கமளித்தாராம்.) படைக்கும்   தொழிலை திரும்ப பெற்ற சிவஸ்தலம். இந்த ஆலயம் (ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ) சிவாலயமாக இருந்தாலும், முருகப்பெருமான்தான் இங்கு பிரதானமாக இருக்கிறார். சிக்கல், எட்டுக்குடி ,   மற்றும் இந்த எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் மூலவராக வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமானின் சிற்பங்கள் எல்லாம் ஒரே சிற்பியினால் வடிக்கப்பட்டவை என்பது ஆச்சர்யமான சிறப்பு. ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை  சமேதராக இத்தலத்து முருகப்பெருமான் தென்திசை பார்த்து நடராஜர் அம்சத்துடன் இருப்பதால், அவரது சன்னதியை 'சபை' என்றே சான்றோர்களால் அழைத்து வணங்கப்படுகிறார். நீண்டகால திருமணத்தடை, நீண்டகால குழந்தைப் பேறு மற்றும் கல்வி, தொழில் முன்னேற்றத்திறகதகு,
சுமார் 2000- வருட  பழமையான
இத்தல சுப்பரமணியரை வேண்டிக்கொள்கிறார்கள்‌‌.
🙏🏻ஓம் எண்கண் சுப்பிரமணிய சுவாமிக்கு, அரோகரா, அரோகரா, அரோகரா...

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...