ஆத்ம கோயில்

ஆத்ம கோயில்
...
விஷம் அருந்தி
அமிர்தத்தை தந்த
சிவன் நடத்திய பாடம்
கலிகாலத்திற்கான பாடமே ...
...
அமிர்தத்தை குடிக்கவே
என்றும்
மனிதர்கள் முதல் தேவர்கள் வரை
அவசரப்படுவது
ஆசையும் படுவது...?
...
மண் திண்ணும் உடலுக்காக
அமிர்தத்தை குடிப்பவன்
விண் காணும் போது
விஷத்தையே
குடித்து ஆக வேண்டும் நரகத்தில்
என்பதே ஆத்ம தத்துவம்.

அடுத்த உயிர்கள்
அமிர்தத்தை குடிக்கவிட்டு
விஷத்தை கூட ஏற்றுக்கொள்பவனை
விண்ணுலக அமிர்த லோகம்
அன்போடு அரவனைக்கும்.
....
உண்மையில்
மண் உலகில்
பிழைக்க தெரிந்தவர்கள்
அனைவருமே
விண் உலகில்
பிழைக்க தெரியாதவர்களே...
....
மண் உலகில்
பிழைக்க தெரியாதவன்
என பெயர் எடுத்தவன்
சிவன் உலகில்
வாழ அறிந்தவனே...
....
விஷ அமிர்த தத்துவம்
கலியிலும் வாழ
ஆத்மத்திற்கான பாடமே...
....
கலியில்
தீமை செய்தவனுக்கு தீமை செய்வதே
மன சுவராஷ்யம்.

எளியவனை ஏமாற்றுவது
கலி புத்திசாலித்தனம்...

சாமாண்யனை நசுக்குவது
கலி சாணக்யத்தனம்...

ஆசைப்பட்டதை
அடைந்தே தீர
எதுவேண்டுமானாலும் செய்யலாம்
என்பது
கலிகால  பிழைக்க தெரிந்த மனிதர்கள்
கூறும் மன தத்துவம்..

பாவம்...

உண்மையில்
எவன்
கலியில்
எது வேண்டுமானாலும்
செய்யலாம் தவறு அல்ல என
அதி புத்திசாலிதனத்தை
பயன்படுத்தி
வாழ தெரிந்த
வெற்றி மனிதனாக மாறுகிறானோ
அவன்
ஆத்மத்தில்
வாழ தெரியாத மனிதனே...
....
பஞ்ச பூதங்களும்
அதன் அதன் வேலையை
நிகழ்வாக செய்வதை கண்டும்..
பஞ்ச பூத கூட்டான மனிதன்
பஞ்ச பூத பாடத்தை அறியாமால் ..
பஞ்சமகா பாவம் செய்வதனாலே..,
புவியில்
பஞ்சமும் வந்தது
பஞ்ச கர்ம நோயும் வந்ததே.
...
தீமை செய்தவனுக்கும்
நன்மை செய்வது..
நன்மை செய்தவனுக்கு
இறை ஆசியை
அள்ளி தருவது..
தான் வாடினும்
தன்னால்
தரணியில் யாரும் வாடலாகாது என
சிவ விரத நோன்பு இருப்பது
அனைத்துமே
சிவ சுவராஷ்யமே..
விஷ அமிர்த
சிவ பாடத்தின்
கலி வாழும்
சிவ சூட்சமும் இதுவே.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...