இன்றய கோபுர தரிசனம்: அருள்மிகு ஸ்ரீ (யாழினும் மென்மொழியம்மை) மதுரபாஷிணி அம்மன் சமேத ஸ்ரீ (விளமர், விமலன்) பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், (திருவிளமர், திருவராகம்) விளமல், திருவாரூர். ( மூலஸ்தானத்தில் மண்ணால் ஆன சுயம்பு லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என ஒரே சன்னதியில் ஈசனின் மூன்று வடிவங்களை தரிசிக்கலாம் என்பது இந்த சிவஸ்தலத்தின் பெருஞ்சிறப்பு. சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய தலமாதலால் மார்கழி திருவாதிரை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இத்தலத்தில் சிவனின் திருப்பாதத்தையும் ஒரே நாளில் தரிசிப்பது, மிகச்சிறந்த பலன் நிறைந்த புண்ணியமாம்.
ஸ்ரீ பதஞ்சலி முனிவரால் நிறுவப்பட்ட, சுமார் 2500-வருடங்கள் பழமையான இந்த சிவாலயம், தேவார பாடல் பெற்ற 276-சிவத்திருக்கோயில்களில் 153-வது சிவஸ்தலம். திருமணத்தடை, குழந்தைச் செல்வம், செய்யும்தொழில் சிறப்புக்கும், உடல், மன ஆரோக்கியத்திற்க்கும்
இந்த ஈசாலயத்தை வணங்குகிறார்கள்.)
No comments:
Post a Comment