குரு தரிசனம்

குரு தரிசனம் -:

1. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?

பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்...ஆனால்
நீ முன்னேறாமல் இருப்பாய்

2. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?

-: முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு

3. குரு சேவை எதற்கு?

:-குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.

4. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?

:- குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும், சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம் தேவையில்லை.

5. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?

:- குரு என்பவர் பாவ விமோட்சகர்.

6. குரு உருவம் எப்படிப்பட்டது?

:-குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.

7. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?

:-இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்

8. குரு என்பவர் கடவுளா?

:- உன்னுள் கடவுள் ஒளிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்

9. ஒளிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?

:- எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒளிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.

10. குரு என்பவர் எதற்கு?

:- குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் . சத்திய நித்திய ஜீவியாக வாழும் பாக்கியத்தை ஏற்படுத்தி தருவபவர்கள்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...