பிறப்பு சக்ரத்தின்
மா பெறும்
இரு சக்ரம்
நல்வினை தீவினை. .
....
சூழண்டு ஓடும்
சக்கரம்
இது
உயிரை சுமந்து ஒடும்
சக்கரம்
...
கர்ம கணக்கில் பிறந்த
உயிரினம்
சூழலும்
அதனதன்
பாவ புண்ணிய கணக்கு வழி
அதுவே
நல் வினை தீவினை. ..
....
நல் வினை தகுந்த
தாய் தந்தை
மனைவி
நண்பன்
சுற்றம்
குரு அமைய
தீவினை
தகுந்த
பெற்றோர்
சுற்றம் அமைய
விதி அமைத்து கொடுத்த
விசார பிறவி பயண சக்கரமே
நல் வினை தீவினை
சக்கரங்கள்
.....
உலகின்
உயிரின்
ஒரே
அடிப்படை விதி
உயிரை
சுமந்து செல்லும் உடலின்
பிறப்புக்கும் பயணத்துக்கும்
அடிப்படை
அந்த உயிரின்
நல் வினை
தீவினை
பொறுத்தே பிறக்கும். .
....
....
பிறக்கும் போது
ஒருவனுக்கு இருக்கும்
நல்வினை தீவினை அளவு
அவன் இறக்கும் போது
அவர்களிடம்
இருக்கும்
தீவினை நல்வினை அளவு
அதுவே
பிறந்த பிறவியின் வாழ்க்கை..
...
பிறக்கும் போது
தீவீனை மிகுந்தவரும்
இறக்கும் போது
நல்வினை மிகுதிபடுத்தலாம்
என்பதும்
பிறவிக்கு கொடுத்த சுதந்திரம்..
...
எத்திவினை விளைவையும்
மாற்றி அமைத்து
நல் பாதை செல்ல முடியும் என்பது
பிறவிக்கு
கிடைத்த வரம்.
பிறக்கும் போது
கொண்டு வரும்
இரு வினை
....
இறுதியில்
எடுத்து செல்லும்
இரு வினையும் இதுவே. ..
....
அவையே
உயிர் தத்துவங்களின்
அச்சாணி
...
தீவிணை செய்பவரை கண்டு
நல் நெஞ்சம் கலங்குவது அறியாமை
தீவினையின் தண்டனை
உணர்ந்த ஒருவன்
தீவினை செய்ய அஞ்சுவான்.
தீயது செய்ய அஞ்சாதவன் அறியா
தவனே தானே தீயில் துகில்வதும்.
(உயிரோடு ஒருவன் நெருப்பில் இறங்கியும்
அவன் உயிர் உடலை விட்டு செல்லாது
கொடிய துயரம் வாட்டும் செயலை விட
பல மடங்கு துன்பத்தை தரும்
தீவினையின் தண்டனை அறியாதவனே
தீவினை செய்ய அஞ்சுவதில்லை)
அறம் அறிந்தவன் அஞ்சுவது தீவினைக்கே
தர்மம் அறிந்தவன் நேசிப்பது
நல்வினைக்கே
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment