இந்து மதம்

1. இந்து மதம் சில உண்மைகள்:

சைவம்- சிவன்.
வைணவம்- விஷ்ணு.
கௌமாரம்- முருகன்.
சாக்தம்.      - சக்தி.
சௌரம்.     - சூரியன்.
காணாபத்தியம்- விநாயகர்.
இந்த ஆறும் சேர்ந்தது ஸ்மார்த்தம். இன்றைய இந்து மதம்!!

2. இந்து மதம் பெயர் காரணம்:

இந்திய வளங்கள், செழிப்பு காரணமாக கிரேக்கர், யவனர் சிந்து நதிக்கரையில் ஆரம்பிக்கும் நாடு தேடி வந்தனர்.  அது நதிகளால் நாகரிகம் அறியப்பட்ட காலம்!! சிந்து, பின் இந்து நாடாக மாறி, இங்கே உள்ள வழிபாடு இந்து மதமாக அறியப்பட்டு, ஒன்றானது!!

3. இந்து மத தெய்வங்கள் (தென்னிந்திய திராவிட நிலப்பரப்புகள் &  தெய்வங்கள்)  குறிஞ்சி - முருகன்
முல்லை -  மாயோன் (திருமால்)
மருதம் - இந்திரன்
நெய்தல் - வருணன்
பாலை - கொற்றவை. அந்தந்த இயற்கை அமைப்பு &  தேவை எதுவோ, அத்தகைய இயற்கை வழிபாடு.

5. சிவலிங்கம், சிவ வழிபாடு:

சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் அங்கு சிவலிங்க வழிபாடு இருந்ததைக் காட்டுகிறது. இயற்கை வழிபாட்டில், மலை வடிவம் சிவலிங்கம்!! மலைச் சிகரம் சிவனின் ஜடாமுடி!  இமயமலையின் பனி உருகி வழிவதால், கங்கா நதி உருவாகிறது!!  சிவனின் தலையில் கங்கா தேவி உள்ளதாக உருவகம் செய்து,  இயற்கையை இறைவனாக வழிபட ஆரம்பித்தனர்!!

4. ஸ்ரீ விநாயகர் வழிபாட்டின் ஆரம்பம்??: சின்ன கண்கள். ஆனால் தெளிவாகப் பார்க்கும். (பக்தர்களை) பெரிய காதுகள். மிகச் சிறிய சத்தமும் கேட்கும். (நமது குறைகளை) தும்பிக்கை, ஊசியை கூட பிடித்து எடுக்கும். (நம்மை கைவிட மாட்டார்) பெரிய வயிறு. பிரச்னைகள் அனைத்தும் ஜீரணம் ஆகி விடும். (நம் பிரச்னைகள் அனைத்தும் தீர்ப்பார்)பெரிய உருவம்! ஆனால் கர்வமின்றி பாகன் / பக்தனுக்கு கட்டுப்பட்டு குழந்தையாக நிற்கும். யானையோடு பழகிய ஒருவர் பக்தனாக மாறி, மனித உருவம் கொடுத்து விநாயகரை வழிபட ஆரம்பித்தார்!! ஓம்கார வடிவம், ப்ரணவப் பொருள் ஆகியவை பின்னர் வந்த விளக்கம். விநாயகர் சதுர்த்தி ஆடம்பரம் நமது சுதந்திர போராட்டத்தின் போது மும்பையில் பாலகங்காதர திலகரின் ஏற்பாடு.  இதுவே காணாபத்திய கணபதி வழிபாட்டின் அடிப்படை.

6.  இந்து மதக் கடவுள்கள்: 

சௌரம் -  சூரிய வழிபாடு. இயற்கை வழிபாட்டில் சூரியன் உலகின் முதல் சமையல்காரர்!! காய், கனி, கிழங்கு அனைத்தும் சமைத்துக் கொடுக்கும் வள்ளல்!! இரவின் பயத்தில் இருந்து, காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு பயந்து, வாழ்ந்த நம் முன்னோர்,  சூரியன் உதித்தவுடன் புத்துணர்வு பெற்று சூரியனை வணங்கி வரவேற்றனர்!!

7. இந்து மதக் கடவுள்கள்:

இயற்கையின் உருவகம்!! பனிமலையான இமயமலை சிவன் உருவகம்! மூன்று புறமும் கடல் சூழ்ந்த நமது நாட்டில் கடலுக்கு நடுவே ஓர் இறைவன் உருவகம் அவசியமானது!! பெருங்கடலை, பாற்கடல் என உயர்த்தி, அதில் பரந்தாமன் பள்ளி கொண்டதாக நமது மூதாதையர்கள் வணங்கினர்!! 

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...