தினம் ஒரு மூலிகை

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

*🍁திங்கள் – அருகம்புல்☘*

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

*🍁செவ்வாய் – சீரகம்☘*

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

*🍁புதன் – செம்பருத்தி☘*

இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

*🍁வியாழன் – கொத்துமல்லி☘*

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

*🍁வெள்ளி – கேரட்☘*

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

*🍁சனி – கரும்பு சாறு☘*

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

*🍁ஞாயிறு – இளநீர்☘*

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை  சுத்திகரிக்கும்.

_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_

*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...