சனாதன தர்மம் என்றால் என்ன அதன் அர்த்தம் என்ன?
நிலையான தர்மம்/தத்துவஞானம் என்பதே சனாதன தர்மம் என்பதன் அர்த்தமாகும்.
சனாதன தர்மம் மனித வாழ்க்கைக்கான நிலையான தர்மத்தை தரக்கூடியது. நமது புராணங்களும் வேதங்களும் மனித வாழ்க்கைக்கு தேவையான ஒழுத்தையும் வாழ்வின் இன்ப துன்பங்களையும் கற்பிக்கின்றன.
மதங்களை காட்டிலும் சனாதன தர்மம் எந்த வகையில் சிறந்தது?
மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது.
சனாதன தர்மம் ஆக்கமும் அழிவுமற்ற நிலையான தர்மமாய் உயர்ந்து நிற்கிறது.
மற்ற மதங்கள் கடவுளை பயமுறுத்தும் பொருளாக காட்டுகின்றது. கடவுளை கண்டு அஞ்ச வேண்டும் கட்டாயம் இறைவனுக்கு அஞ்சி அவனை தொழ வேண்டும் இறைவனை தொழாதவர் நரகத்தில் தள்ளப்படுவார் என மனிதனை தன் இயல்பில் செயல்பட விடாமல் பயமுறுத்தி ஒரு கட்டாய சட்டத்தினை பின்பற்ற வைக்கின்றன.
சனாதன தர்மம் இறைவனை குழந்தையாக பாவிக்கிறது இறைவனின் முன்பு மனம் விட்டு பேசும் உரிமையை தருகிறது.
கண்ணன், பிள்ளையார், முருகன் போன்ற குழந்தை பருவ இறைவனின் கதைகள் மூலம் இறைவனை ரசிக்கும் பொருளாய் காணமுடியும்.
ஸ்ரீராம அவதாரத்தின் படி இறைவனே ஆயினும் மனித வடிவம் எடுத்தால் மனிதனுக்கான கர்ம வினைகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது.
ராமாயணம் ஸ்ரீராமரின் உயர்ந்த பண்பையும், சீதையின் கற்பு நெறியையும், லட்சுமணன்,பரதன் ஆகியோரது சகோதர பாசத்தையும், ஹனுமனது பக்தியையும் பறை சாற்றுகிறது.
மஹாபாரதம் மனித வாழ்வின் இன்ப துன்பங்களையும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் யுத்தத்தில் தர்மத்தின் வெற்றியையும் எடுத்துரைக்கின்றது.
யுத்த களத்தில் கலங்கி நிற்கும் அர்ஜூனனுக்கு கண்ணன் உரைத்த கீதை மனித வாழ்வின் மாபெரும் பொக்கிஷம். மனிதன் ஒவ்வொரு முறையும் வாழ்வில் தடுமாறி நிற்கும்போது கீதையின் வரிகளை உணர்ந்து படித்தால் வாழ்க்கையின் அடுத்தகட்ட செயல்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
மேலும் நன்மை செய்தால் சொர்கம் பாவம் செய்தால் நரகம் என்று தான் சொல்கிறதே தவிர மதங்களைப்போல் இறைவனை வணங்காவிட்டால் நரகம் என ஒருபோதும் சொல்லவில்லை.
மதங்கள் இறைவனை வணங்கும் முறைகளைத்தான் கூறுகின்றன.
ஆனால் சனாதன தர்மம் அஹம் ப்ரம்மாஸ்மி என தன்னையே கடவுளாக நினைத்து இறைநிலை அடையக்கூடிய அத்தனை வழிகளையும் மனித குலத்திற்கு தருகிறது.
உலகிலுள்ள அனைத்து மதங்களை எடுத்துக்கொண்டாலும்
*சனாதன தர்மம் ஒன்றே மனித வாழ்க்கைக்கான சிறந்த தர்மம்* என்பதை உலகம் உணர்ந்து ஏற்கும் காலம் வெகு விரைவில் வரும்.
சர்வம் சிவமயம்
ஓம் நமசிவய
No comments:
Post a Comment