தலைமுறை_சாபம்_நீங்க_வேண்டுமா?

#திருவிடைமருதூர்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே பிறந்தது முதல் இறப்பு வரை செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள். ஒரு சிலர் பிறந்தது முதல் இறப்பு வரை கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் சிறிது காலம் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கையில் திடீரென ஏழ்மை நிலைக்குச் சென்றுவிடுவர். ஒரு சிலர் விவரம் தெரிந்தது முதல் வறுமையிலேயே வாழ்வார்கள்.

       மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, தொழில் அமையாமை, தொழிலில் நஷ்டம், வேலையில் நிம்மதியின்மை, சரியான வேலை கிடைக்காத நிலை, வேலை இருந்தும் போதிய வருமானம் இல்லாத நிலை, குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமையின்மை, திருமணத்திற்குப்பின் தம்பதியினர் இருவரும் பிரிந்து செல்லுதல், எடுத்த செயல்கள் அனைத்திலும் தடை, தாமதம் ஏற்படுதல், உற்றார், உறவினர்களுடன் பகை ஏற்படுதல், குழந்தைகள் கல்வியில் தடை ஏற்படுதல், சரியான பருவத்தில் திருமணம் நடக்காமல் இருப்பது போன்ற கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தால் தலைமுறை சாபம் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

    வாழ்வில் அடிக்கடி கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களின் முன்னோர்கள் மற்றவர்களுக்கு கெடுதல் செய்து வாழ்ந்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னோர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கஷ்டத்தை தாங்க முடியாமல் இறைவனிடம் முறையிடுவார்கள். இறைவன் முன்னோர்கள் செய்த பாவத்திற்காக தண்டனையை அவர்களின் சந்ததிகளுக்கு தக்க சமயத்தில் வழங்குவார்.

    முன்னோர் செய்த பாவமானது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். முன்னோர்கள் செய்த பாவம் சந்ததிகளைப் பாதிக்கும். செல்வ செழிப்புடன் வாழும் ஒருவர் திடீரென ஏழையாகிவிட்டால் அவருக்கு தலைமுறை சாபம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தலைமுறை சாபம் இருந்தால் அடிக்கடி கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் நீங்க முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் பிரம்மஹத்தி தோஷப் பரிகாரங்களை செய்ய வேண்டும்.

   தலைமுறை சாபத்திலிருந்து விடுபட திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் பிரம்மஹத்தி தோஷப் பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து அடிக்கடி கஷ்டங்களை சந்தித்து வருபவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று தோஷப் பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் தலைமுறை சாபம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூரும் உள்ளது.

இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

#அஸ்வமேதப்_பிரகாரம்:

இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.
#கொடுமுடிப்_பிரகாரம்:
இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
#ப்ரணவப்_பிரகாரம்:
இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

#தலத்தின்_சிறப்பு:
திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.

சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.

அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான்.

இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...