ஸ்ரீ லிங்காஷ்டகம் விளக்கம்

பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும், உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த ஸ்லோகம் லிங்காஷ்டகம்.

இந்த ஸ்லோகத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

ஸ்ரீ லிங்காஷ்டகம்

*"ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்*
*நிர்மல பாஷித சோபித லிங்கம்*
*ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."*

தமிழில்

*நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்*
*தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்*
*பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்*
*வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்*

*விளக்கம்*
நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

*"தேவ முனி ப்ரவார்ச்சித லிங்கம்*
*காம தஹன கருணாகர லிங்கம்*
*ராவண தர்ப்ப விநாசக லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."*

தமிழில்

*வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்*
*காமனை எரித்த பேரருள் லிங்கம்*
*ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்*
*வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்*

*விளக்கம்*
தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம், இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

*ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்*
*புத்தி விவர்த்தன காரண லிங்கம்*
*ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்*

தமிழில்

*திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்*
*சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்*
*தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்*
*வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்*

*விளக்கம்*
எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம், சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்."

*கனக மஹாமணி பூஷித லிங்கம்*
*பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்*
*தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.*

தமிழில்

*படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்*
*கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்*
*தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்*
*வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்*

*விளக்கம்*
மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம், நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம், தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

*குங்கும சந்தன லேபித லிங்கம்*
*பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்*
*ஸஞ்சித பாப விநாசன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்*

தமிழில்

*குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்*
*பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்*
*வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்*
*வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்*

*விளக்கம்*
குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம், பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

*தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்*
*பாவையர் பக்தி பிரேவச லிங்கம்*
*தினகர கோடி ப்ரபாகர லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.*

தமிழில்

*அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்*
*அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்*
*கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்*
*வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்*

*விளக்கம்*
தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம், உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம், கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

*அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்*
*ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்*
*அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.*

தமிழில்

*சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்*
*எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்*
*அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்*
*வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்*

*விளக்கம்*
எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம், எட்டு விதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

*ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்*
*ஸுரவன புஷ்ப ஸதாச்சித லிங்கம்*
*பரமபர பரமாத்மக லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாதிவ லிங்கம்*

*லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள *
*சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே*

தமிழில்

*சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்*
*நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்*
*அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்*
*வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்*

*சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்*
*சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்*

*விளக்கம்*

"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!".

தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம், தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால், சிவலோகம் கிடைக்கும், சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...