இறைவனையடைய, ஆன்மா முக்தி அடைய, மோட்சம் பெற்றிட,
பரபிரம்மமாகிட..
சாியை, கிாியை, யோகம், ஞானம் என நான்கு வழிகள் சிவயோகத்தில் உண்டு.
🌹இறைவன் சாியையிலே உள்ளவா்களுக்கு சிலையில் நின்றாா்.
🌹இறைவன் கிாியையிலே உள்ளவா்களுக்கு
யந்திர-மந்திர
வடிவமாக நின்றாா்.
🌹இறைவன்
யோக நிலையில் உள்ளவா்களுக்கு உள்ளொளி- கனலாக
நின்றாா்.
🌹இறைவன்
ஞான நிலையில் உள்ளவா்களுக்கு அன்பே தாமாய்/சிவமாய் எப்போதும் விளங்கித் தோன்றியும் அருள் புாிகின்றாா்.
சாியையாவது.. எஜமானனிடம் வேலைக்காரன்/அடிமை நடந்து கொள்வதற்கு ஒப்பாகும்.
இதுதான்~
தாச மார்க்கம்!
கிாியையாவது தந்தையிடம் மகன் அழகாகப் பேசி,
கிட்ட நின்று, தந்தையைத் தொட்டு அவா் மனதை மகிழ்வித்து, அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதை ஒப்பாகும்.
இதுதான்
~ சற்புத்திர மார்க்கம்!
யோகமாவது
ஒரு நண்பனோடு
ஒரு நண்பன் உாிமையுடன் உறவு பாராட்டிப் பழகுவதை ஒப்பாகும்.
இதுதான்~ சக மார்க்கம்!
ஞானமாவது
கணவனும் மனைவியுமாகிய இரண்டு பேரும் உடல் வேறானாலும் உயிா் ஒன்றாக நின்று,
இரண்டும் ஒன்றும் இல்லாமல்,
ஒருவரது இன்பம் மற்றவருடையதாக ஒன்று சோ்ந்து
உாிமை-உயிா்த்துணை கொண்டுள்ளதற்கு ஒப்பாகும்.
இதுதான்~
சன் மார்க்கம்.!
(சுத்த சமசர சன்மார்க்கம்)
இவ்வழி மார்க்கத்தில்..
இறையடைய
பாலபருவம்,
பிரம்மச்சரியம்,
கிருகஸ்தம்,
வானப்பிரஸ்தம்,
சந்நியாசம்,
நிர்வாணம்
(துறவி,
யோகி,
ஞானி)
என
பயணிப்பதே..
"சனாதன தர்மம்"
எனும் பாரத
வாழ்க்கை
நெறியாகிறது.
இதைதான் தாயுமான சுவாமிகளும்..
"விரும்புஞ்சாியை
முதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்பும், மலா்,
காய், கனிபோல் அன்றோ பரா பரமே!" எனப் பாடியுள்ளாா்.
நமது ஆலயங்கள் ஒரு யோகியின் சரீரத்தின் கண் அமைந்துள்ள தத்துவங்களை விளக்குகின்றன.
யோகியின் பாதம் முதல் சரீரம் வரையுள்ள பாகங்களையும்,
அவனது சிரசே இறைவன் விளங்கும் தன்மையையும்..
மெய்-விஞ்ஞானமாக புராதண கோயில்கள் எனும் ஆலயங்கள்
நன்றாக
எடுத்து காட்டுகின்றன.
ஆகவே,
சாியை,
கிாியை கடைபிடிப்பவா்களை யோகிகளாக்க..
ஆலயங்கள்/
கோவில்கள் பயன்படுகின்றது எனலாம்.
தற்காலத்தில் பலா் கோவில்கள் பக்கமே வருவதில்லை, போவதில்லை.
அதனாலேயே
இறைபெரியோர்கள்
பார்த்து பார்த்து
உருவாக்கிய
ஆலய பொக்கிஷங்கள்
இன்று
அதை காக்கும்.. கயவர்களாலேயே
களவாடப்படும்
கொடுமைகள்
நடந்தேறி வருகிறது.
அதனாலோ..
என்னவோ!
பூதேவி பொங்கும்
நாள் (பூகம்பமும்) நெருங்குகிறது.
இது
இப்படியிருக்க
எப்படி "ஞானம்"வரும்?
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
என ஔவையார் சொன்னதை
எப்போது நம்மவர்கள் அறிந்து உணர்வது
எக்காலம்?
No comments:
Post a Comment