ஸ்ரீ வாலை அரசி

       கொங்கண சித்தர்
                     
      சித்தர் வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே இந்த வாலை என்னும் தெய்வத்தை பற்றி தெரியும் . இவள் பத்து வயது சிறுமி என்கிறார்கள் சித்தர்கள் . நம்மை அப்பனிடம் சேர்க்கும் அன்னையாக இருப்பவள் . இவளை பற்றி தெரிய வேண்டும் என்றாலே விட்ட குறை வேண்டும் என்கிறார் கொங்கனவர் தம் பாடல்களில் .

                             நந்தவனத்திலே சோதியுண்டு நிலம்
                             நித்திய பேருக்கு நெல்லுமுண்டு
                             விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
                             விட்டகுறை வேணும் ஞானப்பெண்ணே
           
என்கிறார் . இது மட்டுமல்ல வாலையை பற்றி தம்முடைய வாலைக்கும்மி பாடல்களில் நிறைய கூறுகிறார் .

                             வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
                             காப்பது சேலைக்கு மேலுமில்லை
                             பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
                             கும்மிக்கு மேலான பாடலில்லை

எண்று இந்த வாலை தெய்வத்தின் மகிமையை நமக்கு அறிவுறுத்துகிறார் .
ஆத்மாவை பரமாத்மாவிடம் கொண்டு செல்ல வாலையால் மட்டுமே இயலும் இவளை பாடாத சித்தரில்லை , என்னும் அளவிற்கு எல்லா சித்தர்களும் இவளை பாடி பணிந்திருக்கிறார்கள் . மாயையும் அவளே , மாயையை இவள் தான் உண்டு பண்ணுகிறாள் என்பதையும் கொங்கணர் அழகாக எடுத்து வைக்கிறார் பாருங்கள் …

                                    அஞ்சு பூதத்தை யுண்டு பண்ணிக் கூட்டில்
                                    ஆறா  தாரத்தை யுண்டு பண்ணிக்
                                    கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை
                                    கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்
          

       நம்முடைய ஆன்மீக ஞானத்தை சோதித்து நம்மை சுற்றி மாயைகளை உருவாக்கி அதற்குள்ளே விழச் செய்திடுவாள் நாம் விழுந்து விட்டோமேயானால் முக்தியில்லை இதைத்தான் சிவவாக்கியர் தனது பாடலில் ..

                           ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
                           நாடி நாடி நாடி நாடி நாட்களுங் கழிந்து போய்
                           வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்
                          கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

ஆகவே அவளையே சரணாகதியாக , அப்பனிடம் நம்மை அவளால் மட்டுமே கொண்டு சேர்க்க முடியும் என்று அவளையே கதியாக இருந்தோமேயானால் நம்மை கண்ணைப் போல காத்திடுவாள் . குழந்தை  தானே அன்போடு அவளை அழைத்தாள்  உடனே வருவாள் . மந்திரத்திற்கும் , தந்திரத்திற்கும் அப்பாற்பட்டவள் , எதற்குள்ளும் அடங்காதவள் அன்பு என்னும் ஒரே சொல் தான் அவளை நம்மோடு இருக்க வைக்கும் . மற்ற எதுவும் இவளைக் கட்டுப்படுத்தாது . ஈசனும் , அவளும் வேறில்லை . கொங்கனவர் கூறுகிறார் கேளுங்கள் …   

                                         
                                      காலனைக் காலாலுதைத் தவளாம் வாலை
                                      ஆலகா லவிட முண்ட  வளாம்
                                      மாளாச் செகத்தை படைத்தவளா மிந்த
                                      மானுடக் கோட்டை இடித்தவளாம்  .

இன்னும் நிறைய பாடல்கள் . தேவைகளை குறைத்தால் ஒழிய எதிர்பார்ப்பு குறையாது எதிர்பார்ப்பு இருக்கின்ற வரையில் ஆசை இருந்து கொண்டே இருக்கும் . ஆசை இருக்குமேயானால் எப்படி ஈசனை அடைய முடியும் , வாலையை  காண முடியும் சித்தர்கள் வழியில் செல்ல முடியும் . அவன் அருளால் மட்டுமே இது எல்லாம் சாத்தியம் அவனே நமக்கு நல்ல குருவையும் கொடுப்பான் . அந்த குரு மூலமாக வாலையை அறிவோம் அவள் மூலமாக அப்பனை அடைவோம் .

                          

                   

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...