ஆன்மா

ஆன்மாவை அறியாதவர்கள் மனிதப்பிறவிக்கு தகுதி அற்றவர்கள். !

*ஒவ்வொரு பிறவியாக கடந்து இறுதியில் .உயர்ந்த அறிவுள்ள பிறவியாக மனித தேகம் கொடுத்துள்ளது இறைவன் வழங்கிய கொடையாகும்..*

உயர்ந்த அறிவுள்ள பிறவி கிடைத்த மனிதன் உயர்ந்த இடத்திற்கு செல்லாமல் .தாழ்ந்த நிலையிலே வாழ்ந்து அழிந்து போகிறான்...

காரணம் !

உயர்ந்த இடத்திற்கு செல்லும் வழியை வள்ளலார் மட்டுமே ..

**துறைஇது.வழிஇது.
துணிவிது.நீ செய்யும் முறைஇது என மொழிந்துள்ளார்**

மனிதர்களாகிய நாம் இதுவரையில் வள்ளலார் சொல்லியுள்ள நேர்வழிப்பாதையை பின் பற்றாமல்.தவறான பாதையையே பின்பற்றி பிறந்து பிறந்து .இறந்து இறந்து வீண் போகின்றோம்....

*நம்மை இடைவிடாது.நம் உடம்பிலே அமர்ந்து.உயிர் உடம்பு கரணங்கள்.இந்திரியங்கள் அனைத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவை அதாவது உள் ஒளியை தொடர்பு கொள்ள நேர்வழி தெரியாமல் தவறான வழியை பின்பற்றி அழிந்து அழிந்து வீண் போகின்றோம்...*

*ஆன்மா கோடி சூரிய பிரகாசம் உடையது.*.

அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளால்.அகத்தில் உள்ள ஆன்மா . மறைக்கப்பட்டுள்ளது அவை திரைமறைப்பில் இருந்து அனகமாக அதன் வேலையை ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டே உள்ளது..

ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் நீங்கினால் தான் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள முடியும்..

ஆன்மாவுக்குள் உள் ஒளியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கிறார்..

உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட வெள்ஒளி காட்டிய மெய்  அருட் கனலே !

என்கிறார் வள்ளலார்..
மெய் அருட்கனல் என்பதுதான் அருட்பெருஞ்ஜோதி யாகும்...

நம் உள் இருக்கும் ஆன்மாவையே பார்க்க முடியாமல் தொடர்பு கொள்ள முடியாமல்.பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை எப்படி பார்க்க முடியும் ! எப்படி தொடர்பு கொள்ள முடியும்.! எப்படி அருளைப் பெற முடியும் ! எந்த வகையில் மரணத்தை வெல்ல முடியும்...

எந்த வகையில் கடவுள் நிலை அறிந்து அம் மயமாக மாற்ற முடியும்.

உயர்ந்த அறிவு விளங்கிய மனிதர்கள் சிந்திக்க வேண்டும்....

ஆன்மாவைத் தொடர்பு கொள்ள இரண்டே இரண்டு வழிதான் வள்ளலார் சொல்லி உள்ளார்....

ஜீவகாருண்யம் என்னும் பரோபகாரம் ஒன்று...உண்மைக்  கடவுளை அறிந்து கொள்ள சத்விசாரம்.இவ்இரண்டினால் மட்டுமே ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை விலக்கமுடியும் .

இத்திரைகள் சாதாரண மாக விலகாது...அதி உஷ்ணத்தால் மட்டுமே விலகும்.

அதி உஷ்ணம் என்றால் !

நம் உடம்பில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவின் தன்மையானது  கோடி சூரிய பிரகாசம் உள்ளது.

அந்த உஷ்ணத்தை அதாவது சுத்த உஷ்ணத்தை தாங்கும் அளவிற்கு உடம்பு  மாற்றம் அடைய வேண்டும்..

ஆண்டவர் அருளைப் கொடுக்க தயார் நிலையில் உள்ளார்..அந்த சுத்த உஷ்ணத்தை கொடுத்தால்  நம் பூத உடம்பு தாங்குமா என்றால் தாங்காது...

இந்த உண்மைத் தெரியாமல்.அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும் அறியாமல். வெட்டி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளோம்..

நமக்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வு எங்கனம் கிடைக்கும்..சிந்திக்க வேண்டும்....

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால் வள்ளலார் போல் சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே கிடைக்கும்...

நம் விருப்பம் போல் வாழ்ந்து கொண்டு வீண்காலம் கழிக்கின்றோம்.

வள்ளலார் எவற்றை எல்லாம்  விடச்சொன்னாரோ .
எவற்றையும் விடாமல்.எவற்றை எல்லாம் பின்பற்ற சொன்னாரோ எவற்றையும் பின் பற்றாமல்..
விடாப்பிடியாக உலகியல் வாழ்க்கையைப் பின் பற்றி பிடித்துக் கொண்டு... மரணத்தை வென்றுவிடலாம் என்று நினைப்பது அறியாமையாகும் .பகல் கனவாகும்...

ஆன்மாவை தொடர்பு கொள்ள எவை எவை தடையாக உள்ளதோ அவற்றை எல்லாம் சுத்தமாக அகற்றினால்  மட்டுமே திரைகள் விலக வாய்ப்புண்டு..

நமக்கு உண்மைக் கடவுள் யார் ? என்றே தெரியாமல்..
பொய்யான கடவுள்களைத் தொடர்பு கொண்டு உள்ளோம் ..ஆதலால்  ஆன்மாவை எக்காலத்திலும் காணவே முடியாது..அருளைப் பெறவே முடியாது.. 

அதனால் தான் உண்மை உரைக்கின்றேன் உவந்தடைமின்  என்கிறார் வள்ளலார்.

உண்மைக் கடவுள் தெரியாமல் சத்விசாரம் எப்படி செய்ய முடியும்..சிந்திக்க வேண்டும்.

பொய்ந் நெறி அனைத்தினும் புகுத்தாது எனை அருள் செந்நெறி செலுத்திய சிற்சபை சிவமே !

என்கிறார் வள்ளலார் ...
பொய்நெறியில் சென்றால் அருள் கிடைக்காது என்பதால் உண்மை நெறியாகிய செந்நெறியில் செலுத்திய சிவமே !  சிற்சபையில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்கிறார்..

இங்கே சிவமே என்பது ஆன்ம ஒளியாகும்...எனவே ஆன்மாவை இடைவிடாது தொடர்பு கொண்டால் மட்டுமே சத்விசாரம் என்னும் உண்மைக் கடவுளைத் தொடர்பு கொள்ள முடியும்....

ஜீவ காருண்யத்தால் மோட்ச வீட்டின் திறவு கோல் என்னும் சாவி மட்டுமே கிடைக்கும் ..

*சாவியைக் கொண்டு பூட்டை மட்டுமே திறக்கலாம் கதவு திறக்காது.*.

சத்விசாரம் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதை அறிவால் அறிந்து முழுமையாக  தெரிந்து கொண்டு..
நினைந்து நினைந்து. உணர்ந்துஉணர்ந்து .நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து. வாழ்ந்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கதவைத் திறப்பார்...

ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள திரைகளை நீக்க வேண்டுமானால் ..
ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது ஒரு கதவும் பூட்டும் உள்ளது என்பார் வள்ளலார்..

பூட்டையும் திறக்க வேண்டும் கதவையும் திறக்க வேண்டும்..
அப்போதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்சி கொடுப்பார்..

நாம் பூட்டை திறக்கும் திறவு கோலைப் பெறமுடியாமலே தவிக்கிறோம்.

நாம் சாவிக் கிடைத்து பூட்டைத் திறக்கனும்..அதன்பிறகுகடவுள் தயவால் கடவுள் கதவைத் திறக்கனும்.
கடவுளை நாம் பார்க்கனும்..கடவுள் நம்மைப் பார்க்கனும் இருவரும் ஒன்றாய் சேரனும் .

*இரு உருவமும் அருளால்  ஒரே உருவமாக மாற்றம் அடைய வேண்டும்*.

ஆன்மாவும் பரமான்மாவும் ஒன்று சேர்ந்தபின் உயிர் உடம்பு யாவும்  ஒளி உடம்பாக மாற்றம் அடைய வேண்டும்.

*அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்..*

வள்ளலார் பாடல் !

திருக்கதவும் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்ஜோதித் திரு உருக்காட்டாயோ

உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும்.ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ.

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னை என்னுட் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ.

செருக் கருதாதவர்க்கருளும் சித்தி புரத்தரசே சித்த சிகாமணியே திருநடநாயகனே ! 

மேலும்.

மணக்கதவும் திறவாயோ மறைப்பை எல்லாம் தவிர்த்தே மாற்றறியாப் போன்னே நின் வடிவது காட்டாயோ.

தணிக்கறியாக் பெருநிலையில் என்னோடு நீ கலந்தே கரைகடந்த பெரும்போகம் கண்டிடச் செய்யாயோ.

தணிக்கறியாக் காதல் மிகப் பெருகுகின்ற தரசே தாங்க முடியாது இனி என் தனித்தலைமைப் பதியே

திணிக்கலையாதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே.
சித்த சிகாமணியே என் திரு நடநாயகனே !

மேலே கண்ட பாடலில்.. ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகளை விலக்க வேண்டும் என  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் காதல் கொண்டு வேண்டுகிறார் வள்ளலார்...

இப்படி ஒரு அருளாளர் உலகில் எங்கேனும் உள்ளார்களா !

என்னே அருமையான அற்புதமான் விளக்கம்.எளிய தமிழில். அப்பப்பா சொல்லவோ. அள்ளவோ. வெல்லவோ.  வார்த்தைகளே இல்லை..

தன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்பவர் எவரோ அவரே உயர்ந்த மனிதன்...அவரே ஆன்மீகவாதி..அவரே அருள் பெறும் தகுதி உடைவர்.அவரே கடவுளைக் காணும் தகுதி பெற்றவராகும்..

மரணத்தை வெல்லும் வாய்ப்பு பெற்றவராகும்.

விரிக்கில் பெருகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...