சிவனின் திருமணத்தின் போது, அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன், தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார்.
பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு #மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால்தான் இக்குகை கைலாசகுகை எனப்படுகிறது.
#குகைச்சிறப்பு:
இங்கு விபூதிக்குகை, சர்ப்பகுகை, பாட்டையா குகை, #கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன.
விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.
#ஓம்கார வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடனான பாறை உள்ளது.
இதில் தவம் செய்திட பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
#குன்றுதோறாடல் கோயில்:
திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர், மலைக்கோயில்களை குன்றுதோறாடல் என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது.
சுருளி வேலப்பர், மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர், மகாலிங்கம், சந்தான கிருஷ்ணர், வீரபாகு, ராமபிரான், லட்சுமணன் உள்ளனர். இம்மலைப்பகுதியில் சித்தர்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.
#குகைக்குள் சிவதரிசனம்:
இங்குள்ள ஒரு குகையில் கைலாசநாதர் (லிங்கம்) சன்னதியும், குகையின் மேலேயுள்ள குன்றில் முருகன் சன்னதியும் உள்ளன.
இந்த குகையை கைலாச புடவு (கைலாச குகை) என்கிறார்கள். குகைக்குள் ஒவ்வொருவராக ஊர்ந்து சென்று வழிபட முடியும். குகையின் உள்பகுதியில் இருவர் மட்டும் அமர்ந்து பூஜை செய்யலாம்.
குகைக்குள் இருந்து தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது. குகைக்குள் சென்று வருவதே யோகாசன பயிற்சி செய்வது போலாகும். கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது.
தீர்த்தம் பட்டு இந்த பாறையின் துகள்கள் வெண்ணிறத்தில் இருக்கிறது. இந்த துகளையே பிரசாதமாக தருகிறார்கள்.
#சிறப்பம்சங்கள்:
விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் #விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.
#சுருளிமலை, #தேனி,#சுருளிவேலப்பர்,#விபூதி

No comments:
Post a Comment