மச்சமுனி சித்தர்

""பதம் தரும் சுபிட்சம்""


          ""நமது ஆலயத்தில் வீற்றிருக்கும் சித்தர்களை வணங்கும் முறைகள் ""
         
               "" மச்சமுனி  சித்தர் ""

              இவரை வணங்க உகந்த நாள்  "வெள்ளிக்கிழமை" ஆகும்.

           இவர்  அச்சமற்று அமைதியாக குகைகளில் யோகம் புரிபவர்.

              ஊர் மக்களுடன் எளிமையாகக் கலந்து கொண்டு   வாழ்பவர்.

           ஆன்ம தத்துவங்களையும், விளக்கங்களையும்,    எளிய மக்களும் புரிந்து   கொள்ளும்    வண்ணம் கவர்ச்சியுடன்   விளக்குபவர்.

சொல்லற்றால் மிக்கவர்.

மக்களின்   கூட்டங்களுக்கு   இடையே, விளையாட்டுத்   தனமாக   மகிழ்ச்சியுடன் உயர்ந்த   மார்க்கத்தை   விளக்குபவர்.

இவரை   அன்போடு,   மனமுருகி   வேண்டி   வழிபடுவதன்   மூலம்,
நாம்   எந்த துறையில்   பணிபுரிந்தாலும்,  அந்த   துறையில்,   செல்வம்,    புகழ், தலைமை,   அதிகாரம்    இவைகளை  நம் வாழ்வில்   பெற்று   வாழ்ந்திட    இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

          மச்சமுனி சித்தர் போற்றிகள் :-

"" மதுரை   தலத்தில்   மகத்தான   பல சித்துகள்   புரிந்த   மச்சமுனி   சித்தரே போறறி,

மதுர   மொழியில்   மாந்தரை ஈர்த்து  உயர்   பொருள்   உபதேசித்த   மச்சமுனி சித்தரே போற்றி,

புதன்   தலமான    நான்மாட   கூடலில் சமாதியோகம்   கூடிய   மச்சமுனி   சித்தரே   போற்றி,

பதவி,   புகழ்,  செழுமை,   நற்பேறுகளை, நாளும்   பக்தருக்கு    அளிக்கும் மச்சமுனி  சித்தரே  போற்றி ""

மச்சமுனி சித்தர் போற்றியின் பொருள் :-

மதுரை   மாநகரில்   பல   சித்துக்களை புரிந்தவர்.

இனிமையான   முறையில்   மக்களுக்கு உயர்ந்த   பொருள்களை   உபதேசித்தவர்.

புதன்   ஸ்தலம்   என்று   சொல்லக்கூடிய மதுரையில்   சமாதியோகம்   அடைந்தவர்.

நாடி வரும்   பக்தர்களுக்கு   பதவி, புகழ், செழுமை,  போன்ற   நற்பேறுகளை அளிப்பவர். 

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...