நம் நாவில் உலாவும்
பலவகையான பேச்சு..
1. அன்புப் பேச்சு :
நட்பையும், பாசத்தையும்,
நேசத்தையும் வெளிப்படுத்தி
உறவுகளை தழைக்கச் செய்யும்.
இன்பத்தின் இதய மூச்சு. இரும்புக்கதவையும் திறக்கும் சக்தி
2. அமைதிப் பேச்சு :
அக்கறையையும், அன்பையும்,
பிறர் நலனில் ஆர்வத்தையும்
வெளிப்படுத்தும்
3. ஆலோசனைப் பேச்சு :
உறவையும், நட்பையும்
உறுதிப்படுத்தி உயர்வுக்கு
வழி காட்டும்
4. ஆணவப் பேச்சு :
அற்ப சந்தோசத்தை முதலில் தந்து,
முடிவில் அழிவைத் தந்து விடும்
5. அவமானப் பேச்சு :
அடுத்தவரை துன்புறுத்தி காயப்படுத்தும்
6. வாழ்த்துப் பேச்சு :
பேசுபவருக்கும், கேட்பவருக்கும்
மகிழ்வைத் தரும்
7. மகிழ்ச்சிப் பேச்சு :
நிரந்தர இன்பத்தைத் தரும்
8. மழலைப் பேச்சு : மகிழ்ச்சி தரும்
9. மங்கையர் பேச்சு : மயக்கம் தரும்
10.திமிர் பேச்சு :
முட்டாள் தனத்தை பறை சாற்றும்.
அறியாமையை, கல்லாமையை,
புரியாமையை வெளிச்சம்
போட்டு காட்டும்
11.வீண் பேச்சு :
நேரத்தை வீணடிக்கும்,
விபரீதத்தை தேடித்தரும்,
வம்புகளை வளர்க்கும்,
வளர்ச்சியைத் தடுக்கும்
12. பயப் பேச்சு : பீதியைக் கிளப்பும்
13. கண்டனப் பேச்சு :
எதிர்ப்பையும், வெறுப்புணர்வையும்
வெளிப்படுத்தும்
14.கவிதைப் பேச்சு :
கவர்ச்சி நிறைந்திருக்கும்
15 . பண்புப் பேச்சு : பயன் தரும்
16. பயனற்ற பேச்சு :
பலர் வெறுப்பைத் தேடித்தரும்
17. இனிமையான பேச்சு :
வாழ்வில் உயர்வைத் தரும்.
காரியம் கைகூட வைக்கும்
18. தெளிவான பேச்சு :
குழப்பத்திலிருந்து காக்கும்
19. நிதானப் பேச்சு :
நாளும் நன்மையைத் தரும்
20. ஏளனப் பேச்சு, கேலிப் பேச்சு,
கிண்டல் பேச்சு. இழிவுப் பேச்சு :
தற்காலிக இன்பத்தைத் தரும்
அத்தனையும் உள்ளடக்கியது
வள்ளுவரின் இனியவை கூறலும்,
பயனில சொல்லாமையும்..
நம் பேச்சு எவ்வகை
நம் சிந்தனைக்கு.......
நிரந்தரமில்லாத வாழ்க்கையில்
கொண்டு செல்ல ஒன்றுமில்லை இவ்வுலகில்...!!!
மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும்
நாம் சந்திக்கும் மனிதர்களிடம்
அன்பாகவும் இனிமையாகவும் பேசி
கடந்து செல்வோமே....!!!!
No comments:
Post a Comment