சினைப்பை_கட்டிகள்

 

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/கருப்பை கட்டிகள். இந்த பிரச்சனையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த பிரச்சனையால் டீன் ஏஜ் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் இந்த பிரச்சனையின் போது, கருப்பையின் பக்கங்களில் இருக்கும் சினைப்பைகள் இருக்கும். இந்த சினைப்பைகளில் நீர் நிறைந்த சினை முட்டைகள் உருவாகும். ஒவ்வொரு மாதமும் 20 சினை முட்டைகள் உருவாகின்றன. அவற்றில் ஒன்று மட்டும் தான் வலிமைமிக்கதாக இருக்கும்.

முட்டைகளானது முதிர்ச்சி அடைந்ததும், அந்த முட்டைகளில் சில மாதவிடாயின் போது வெளியேறிவிடும். ஆனால் வலிமை மிக்கதாக இருக்கும் முட்டை மட்டும் கருவுறதலின் போது, கருப்பையினுள் நுழைந்து, விந்தணுவுடன் சேர்ந்து கருவாக உருவாகிறது.

ஆனால் கருப்பை கட்டிகள் இருந்தால், அந்த முட்டைகளானது சரியாக முதிர்ச்சி அடைவதற்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்காமல், அந்த முட்டைகள் கட்டிகளாக மாறிவிடுவதால், மாதவிடாய் சுழற்சி தடைபட்டு, கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. குறிப்பாக மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றன.

அதுமட்டுமின்றி, அந்த கட்டிகள் நாளடைவில் ஆண் ஹார்மோன்களை சுரக்க ஆரம்பிக்கின்றன. இந்த சினைப்பைக் கட்டிகளை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். அதற்கு முதலில் அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இவ்வாறு அதன் அறிகுறிகளை சாதாரணமாக எண்ணாமல், சரியாக கவனித்து அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை பெற்று வந்தால், இதனால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஏனெனில் சினைப்பை கட்டிகள்/கருப்பை கட்டிகள் இருந்தால், அவை நீரிழிவு, இதய நோய், உயர் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

எனவே அதன் அறிகுறிகளை கண்டறிந்து, முறையான சிகிச்சை பெற்றால், ஆபத்தான நிலைக்கு செல்லாமல் இருக்கலாம். இப்போது சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளைப் பார்க்கலாம்.

* சினைப்பைக் கட்டிகள் இருந்தால், அதன் அறிகுறிகளுள் முதன்மையாக தென்படுபவை தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி. அதிலும் மாதவிடாய், பல மாதங்களாக தள்ளிப் போனால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால், அவை சருமத்தில் அதிகப்படியான முகப்பருக்களை உருவாக்கும்.

* ஆண் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகம் இருந்தால், முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி வளர ஆரம்பிக்கும்.

* முறையற்ற மாதவிடாய் சுழற்சியுடன், தலையில் வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், அதுவும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியே. ஏனெனில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுகிறது.

* குறுகிய காலத்திலேயே உடல் எடையானது அளவுக்கு அதிகமாக அதிகரித்தால், அப்போது உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பாருங்கள். ஏனெனில் கருப்பைக் கட்டிகள் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும்.

* ஹார்மோன்கள் தான் மனநிலையை வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு மனக் கவலையை அதிகரிக்கும்.

* திடீரென்று கருப்பு நிறத்தில் சருமம் உள்ளதா? அப்படியெனில் கருப்பை கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம். அதிலும் கழுத்து, அக்குள், முழங்கை போன்ற இடங்களில் கருமை அதிகரித்திருந்தால், அதற்கு கருப்பைக் கட்டிகள் இருக்கிறது என்று அர்த்தம்.

* பருவம் அடைந்த இரண்டு மூன்று மாதத்திற்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறாமல் இருந்தால், அதுவும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே இந்நிலையில் மருத்துவரை அணுக வேண்டும்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...