இன்றய கோபுர தரிசனம் :
அருள்மிகு ஸ்ரீ (ஞானாம்பிகை) ஞானவல்லி சமேத ( செந்நெறியப்பர்) சாரபரமேஸ்வரர் திருக்கோயில், (உடையார் கோயில்) திருச்சேறை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
( இந்த ஆலய ஈசன் சுயம்பு மூர்த்தியாய் அருள்புரிகின்றார். இத்தலத்தில் மட்டுமே ஒரே சன்னதியில் துர்க்கையம்மன் மூன்று வடிவங்களாக ( சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை) அருட்காட்சியளிப்பது சிறப்பு. இங்குள்ள பைரவருக்கு (அப்பர் தேவாரப்பாடல் தனியாக பாடியுள்ளார்) இடது மேல்கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு. கடன் நிவர்த்தி செய்யும் 'ரிண விமோசன லிங்கேஸ்வரர்' இத்தலத்தில் அருள்புரிவது சிறப்புக்குச் சிறப்பு. சோழர்களால் கட்டப்பட்ட, சுமார் 2000-வருடங்கள் பழமையான இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற 276-சிவாலயங்களில் 158-வது சிவஸ்தலமாகும்



No comments:
Post a Comment