இன்றய (கோபுர) தரிசனம் :
அருள்மிகு ஸ்ரீ அலுமேலு மங்கை பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில், திருமுக்கூடல், பழய சீவரம், ( செங்கல்பட்டு To காஞ்சிபுரம் சாலையில் 20 k.m தூரத்தில்) காஞ்சிபுரம் மாவட்டம்.
( திருப்பதி (திருமலை) வெங்கடாஜலபதியின் தீவிர பக்தரான காஞ்சியை ஆண்ட மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்திக்கு, இந்த ஆலயத்தில் சயன கோலத்தில் இருந்த பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்தபோது, 'பிரம்மா, விஷ்ணு, சிவன்' என மும்மூர்த்திகளின் வடிவமாக அருட்காட்சியளித்தாராம். அதைப்பார்த்த தொண்டைமான் சக்கரவர்த்தி 'அப்பா வெங்கடேசா' என்று பரவச பக்தியுடன் இத்தல பெருமாளை வழிபட்டதால், ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என அழைத்து வணங்கப்படுகிறார். சுமார் 2000-வருடங்கள் பழமையான இந்த ஆலயம், பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் முக்கூடலாய் கூடும் கரையில் (மத்திய தொல்லியல் துறையின் சிறப்பான பராமரிப்பில்) அமைந்துள்ளது. தை மாதம் நடக்கும் 'பார்வேட்டை' திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கண்டேய ருக்கு நாதனாகவும், பூமாதேவிக்கு கண்ணனாகவும், தொண்டைமான் சக்கரவர்த்திக்கு திருப்பதி சீனிவாசனாகவும் காட்சி கொடுத்தது இந்த ஆலயத்தின் சிறப்பு.)
ஓம் நமோ நாராயணாய நமஹ

No comments:
Post a Comment