இல்லற தர்மம்

🌸 *இல்லற தர்மம்🌸

*கட்டிய மனைவியைக்*
*கடைசி வரை*
*கண் கலங்காமல்*
*காப்பவன்,*
*தவம் செய்யத் தேவை இல்லை.*
🌸
*இருபத்தி ஒரு வயது வரை*
*அவனவன் சொந்த ஆன்ம கர்மா*
*செயலுக்கு வராது.*

*அந்த ஆன்மாவின்*
*ஸ்தூல தாய் தந்தை*
*கர்மாவே வழி நடத்தும்.*

*96 தத்துவங்கள்*
*முடிவு பெறுவது*
*இருபத்தி ஒரு வயதிலே.*

*அதன் பிறகே*
*அவனது*
*சொந்த*
*ஆன்ம கர்மா*
*செயலில் இறங்கும்.*
🌸
*சிவமாக இருந்தால் மட்டும்*
*சிரசு ஏற முடியாது.*
*சக்தியோடு*
*துணை சேர வேண்டும்.*

*சிரசு ஏற பல வழி...*

*தியானம் மூலம்...*
*பக்தி மூலம்....*
*ஞான மூலம்...*
*யோக மூலம்....*
*தீட்சை மூலம்....*
*சிவசக்தி மூலம்...*
*இன்னும்......*
*எத்தனையோ மூலம்....*
*வழி உள்ளது*
*சிரசு ஏற.*

*ஆனால்*
*சிறந்த மூலம்*
*இல்லற தர்மம்.*
🌸
*சிவம் பிறக்கையிலே....*
*அவனுக்கு முன்பே*
*சக்தி பிறந்து விடுகிறது.*

*சக்தி மாறி*
*சிவம் சேர்ந்தாலே.....*
*பிறவியே சிக்கலே..*

*மனப் பொருத்தம்*
*பூமியிலே ஜெயிப்பது இல்லை.*

*ஆன்ம பொறுத்தமே*
*பிறவியை ஜெயிக்கும்.*

*அந்தச் சக்தியோடு*
*சிவம் சேரும் போதே*
*சர்வமும் சாந்தி ஆகும்.*

*சிவ சக்தி இடையே*
*ஊடலும் கூடலும்*
*உற்சாகம் தானே...!*
🌸
*ஆனால்...*
*சக்தியின் கண்ணீருக்குச்*
*சிவம் காரணமானால்*
*அதை விடக்*
*கொடிய கர்மா*
*உலகில் இல்லை.*

*ஒருவன்*
*வாழ்வை ஜெயிக்க*
*ஆயிரம் வழி*
*தர்மத்தில் உள்ளது.*
*உண்மையே.*

*ஆனால்*
*உறவுகளைக் கொண்டே*
*உலகை வெல்வதும்*
*பிறவிப் பிணி அறுக்கவும்*
*ஒரு வழி உள்ளது...*
*உலகம் அறியாதது.*
🌸
*சொந்தம் என்பது*
*பழைய பாக்கி என*
*அறிந்தவனுக்குச்*
*சொந்தம் சுமை* *இல்லை.*

*நட்பு என்பது*
*பழைய பகை என்பதைப்*
*பண்போடு அறிந்தவனுக்குப்*
*பதற்றம் இல்லை.*

*எதிரி என்பவன்*
*தனது கர்மாவின்*
*தார்மீகக் கணக்கே*
*எனத் தன்மையோடு*
*உணர்ந்தவனுக்கு*
*எதிரி இல்லையே..*
🌸
*உனது எதிரியும் நீயே!*

*உனது செயலே*
*கர்மா ஆகி*
*அந்தக் கர்மாவே*
*நீ எதிரி என* *நினைக்கும்*
*ஒரு உயிருள்ள சடலத்தை*
*உனக்கு எதிராகப்*
*பயன்படுத்துகிறது*
*என நீ உணரும் போது.....,*

*உன் எதிரி முகத்தில்*
*உனது கர்மா*
*உனது கண்களுக்குத்*
*தெரிய வந்தால்..*

*எதிரி...*
*உனக்கு எதிரே இருந்தாலும்*
*கலக்கம் தேவைப் படுவதில்லை.*
🌸
*உன்னை*
*உடனிருந்தே* *கொல்லும்*
*உறவும்,*
*உன்னோடு பிறக்கும்*
*உனது*
*பழைய கணக்காலே!*

*பழைய கணக்குப் புரிந்தால்,*
*பந்த பாசம்;*
*சகோதரத்துவம் மீது*
*பற்று அற்ற பற்று*
*வைத்து...*
*பிறவிக் கடமையை வெல்லலாம்.*

*கர்மாவின் கணக்குப் புரிந்தால்,*
*உனது பக்கத்தில்*
*சரி பாதி அமரும் மனைவி...*
*யார் என்றும் புரியும்.*
🌸
*தாய் தந்தையை*
*அன்போடு*
*பூஜிப்பவன்*
*தந்தை வழி*
*தாய் வழி*
*ஏழு ஜென்ம கர்மாவில்*
*இருந்து தப்பிக்கலாம்.*

*உறவுகளுக்கு*
*அவர்கள் தரும்* *இன்னல்கள்*
*பொறுத்து*
*எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்*
*உபகாரமாக உதவி வந்தால்.......,*

*உனது*
*ஏழு ஜென்ம*
*சமூதாயக் கர்மாவில்*
*இருந்து தப்பிக்கலாம்.*
🌸
*கோயில் போனாலோ*
*மகா குளத்தில்*
*குளித்தாலோ*
*ஒன்றும் மாறாது*

*சிறு இன்பம் மட்டும்*
*சிறிது காலம் கிடைக்கும்*
*அவ்வளவே..*
 🌸
*ஆனால்.....*
*ஒரே ஒரு உறவை*
*நீ பூஜித்தால்*
*பிறவிப் பிணி*
*மொத்தமாகத் தீரும்*
*அது,*
*மனைவியே!!*

*மனைவியை*
*மகிழ்ச்சியாக வைப்பது*
*உலகிலேயே*
*சிரமம் மட்டும் அல்ல.*
*அது தான்*
*உலகிலேயே*
*சிறந்த*
*தவம்.*

*தவம் என்பது* *சாமான்யன்களுக்குச்* *சிரமமே.*

*கட்டிய மனைவியையும்*
*உன் மூலம்*
*அவள் பெற்ற* *பிள்ளைகளையும்*
*உளமாற நேசித்து*
*உன்னதமாக*
*உனது வாழ்வை*
*ஆனந்தமாக நீ*
*அர்ப்பணித்தால்*
*அதுவே*
*உலகின் சிறந்த தர்மம்*
*சிறந்த தவம்!*
🌸
*தாய் தந்தையை*
*வணங்கினால்...*
*- ராமேஸ்வரம் போகத்*
*தேவை இல்லை........*
*பித்ரு தோஷம் நீங்க!*

*உறவுகளை மதித்தால்...*
*- கிரக தோஷம் நீங்கத்*
*திருவண்ணாமலை -*இடைக்காடரைத்*
*தேடத் தேவை இல்லை!*
*நவ கிரகமும்*
*சுற்றத் தேவை இல்லை!*

*மனைவியை,*
*பெற்ற பிள்ளையை* *நேசித்தால்,*
*அவர்களை*
*ஆனந்தமாக* *வைத்தால்...*
*- கர்ம விமோஜனம் தேட*
*அகத்தீசனைத் தேடிப்*
*பாபநாசம்*
*போகத் தேவை* *இல்லை!*

*இதற்குத் தான்*
*இல்லற வாழ்க்கையை*
*அமைத்தான்...*
*நமது*
*முப்பாட்டன்!*
*ஆதி யோக வம்சம்!*
 🌸
*மனைவி*
*அழும் வீடே*
*நரகம்.*

*மனைவி*
*சிரிக்கும் வீடே*
*பிரபஞ்ச சொர்க்கம்.*

*சக்தி*
*உணர்ந்தாலே மட்டுமே,*
*சிவம்*
*ஜோதி ஆக ஜொலிக்கும்!*
🌸
👁👃👁🌹💐🌷🥀🥀🌹💐🌷

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...