காமிய பிரார்த்தனை என்பது உலகியல் தேவைகளுக்காக மனிதன் இறைவனிடம் வைக்கும் வேண்டுதல். நிலையற்ற உலகியல் ஆசைகள் ஆரம்பத்தில் இன்பத்தையும் இறுதியில் துன்பத்தை மட்டுமே அளிக்க வல்லது. நிஷ்காமிய பிரார்த்தனை அல்லது கர்மம் என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்யக்கூடிய செயலுக்கு *நிஷ்காமிய கர்மம்*எனப்படுகிறது. இதில் நிஷ்காமிய பிரார்த்தனையில் ஜீவன் இறைவனை சேர்வதில் மட்டுமே லட்சியமாக கொள்வது. இதில் ஜீவன் தனது சொரூபம் முழுமையும் ஈசனிடம் அளிக்கும் வரையில் நன்றி உணர்வு செலுத்தி வருவதே ஆத்ம சாதனமாகும். உதாரணமாக காமியபிரார்த்தனை செய்யும் ஒருவன் ஆராதனையில் வேண்டுதல் வைத்து ஒரு மணங்கு கற்பூரத்தை வைத்து எரித்து அதை பெரியபூஜையாக கருதுகிறான்.ஆனால் அவனே கற்பூரம் எரிந்தால் மிஞ்சி இருப்பது ஒன்றும் இல்லை என்று எண்ணுங்கால் அந்த கர்மமே ஞானமாகி விடுகிறது. முந்தியது காமியயக்ஞம், பிந்தியது *ஞான யக்ஞம்*. மனிதன் அறிந்தாலும் அறியாது இருந்தாலும் உயிர்கள் அனைத்தின் வாயிலாக நிகழ்வது *ஈசன் செயலே* என்று உணர்ந்து தன் செயலை செய்வது தான் *நிஷ்காமிய கர்மம்*.
No comments:
Post a Comment