கலியுகத்தில் எல்லா விதி சாப, கர்ம, தோச நிவர்த்தி பரிகாரமும் செய்து விட்டேன்.என் கஷ்டம் தீரவில்லை என்பவர்களுக்கான வழிபாடு .
சித்தர்கள்
சித்தர் என்றால் சித்தி பெற்றவர் , சதா சிவ சிந்தனையில் இருப்பவர் என்பது பொருள் .
சிவத்தை நினைத்து
அகக்கண்ணால் கண்டு ,தியானித்து தரிசனம் செய்து ,ஆத்ம சக்தியை எழுப்பி , செயற்கரிய காரியங்களை செய்வது சித்தர்களது செயலாகும் .
கலியுகத்தில் உலகில்,கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது.
அதனால் நமது கோரிக்கைகள் கடவுளிடம் போய் சேர ஒரு கருவியாக இருப்பவர்கள் சித்தர்கள் .
கடவுளிடம் கேட்பதை , சித்தர்களே முன் வந்து நமக்கு அளிப்பார்கள் .
சித்தர்கள் நிலைக்கு நம்மால் உயர முடியும்மா?
முதலில் தன் மனதை அறிந்து ,பின் தன்னை அறிந்து ,பின் இறையை அறிந்து இறுதியில் இறையோடு கலக்க சித்தர் நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு .
அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப இன்பத்தையும் ,துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது விதி .
அதனை நிறைவேற்றத் தான் நவ கிரகங்கள் செயல்படுகின்றன .
சாபம் , தோஷத்திற்காக பரிகாரங்கள் செய்தாலும் ,சில சமயங்களில் மனிதனின் கர்ம வினை பலம் அதிகமாக இருக்குமானால் அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைமை இருக்குமானால்
அதிலிருந்து காப்பற்றுவது யார் ? யாருமில்லை.
அந்த சூழ்நிலையில் நமது ஜென்ம ஜென்ம நிகழ்வுகளின் பலனால் நாம் அனுபவிக்கும் கஷ்டங்களிலிருந்து நம்மை மீட்டெடுக்கவே சித்தர்கள் உருவில் சிவனே நமக்கு உதவ வருகிறார்.
சித்தர்கள் அருள் பெற என்ன செய்ய வேண்டும்
சித்தர்கள் மனிதனிடம் எதிர்பார்ப்பது எதுவும் இல்லை.
அவர்கள் வலியுறுத்துவது உண்மை ,நேர்மை,கருணை அன்பு , தூய்மையான பக்தி , சுய ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கை மட்டுமே.
இறையன்போடு மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம் ,நல்ல செயல் ,நல்ல சிந்தனையும் செயல்படுபவர்களுக்கு
சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும் .
இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருப்பதைக் காணலாம்.
அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை வேண்டினால் நினைத்தது நடக்கும்.
நாம் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை தேடி தரும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை .
அப்படி நாம் ஒவ்வொரு சித்தரையும் வழிபட்டு நம் வாழ்க்கை பிரச்சனைகள் குறைந்து நிம்மதியாக வாழ வழி செய்கிறது சித்தர்கள் வழிபாடு.
No comments:
Post a Comment