இறைநாமம் எப்போதும் அவசியம்

முடியவில்லை என்று முடங்கும் போதுதான் ,
மனிதன் முடிவை எழுதி கொள்வதற்கான நேரத்தை தயார் செய்து விடுகிறான்...

"அய்யோ" , "முடியவில்லை" என்று முனகாமல் ,

"#முருகா #முருகா" "#ராமா #ராமா" என்று இறைவனின் நாமத்தை சொல்லும் பொழுது ,
ஏதோ ஒரு  சக்தி நம்மை அறியாமல் பிறக்கிறது....

அதற்காகத்தான்,
இறைவழிபாட்டை ,
ஒரு இயற்கை சக்தியாக, தன்னம்பிக்கையின் தொடக்கப் புள்ளியாக வைத்து இருக்கிறார்கள்  ,
ஆன்மீகப் பெரியவர்கள்...

உயிர்சக்தியை இப்படிப்பட்ட இறை சக்தியோடு தொடர்பு படுத்தி ,
மனிதனை தோல்வியில் இருந்து மீள்வதற்கான ,
ஒரு சக்கரத்தை இதன்மூலம் இயக்குகிறார்கள்.

"முருகா முருகா"
என்பது மிகவும் சாதாரணமான ஒன்று .

ஆனால் அதில் சிறந்த உயிர் சக்தி இருக்கிறது .

"ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்" அதிலும் மிகச்சிறந்த ஒரு சக்தி இருக்கிறது .

"ஓம் நமசிவாய"
"ஓம் சக்தி "
இவைகளிலும் உயர்ந்த உயிர் சக்திகள் இருக்கிறது.

தோல்வியிலிருந்து வெற்றி பெற்றவனை கேட்டுப்பாருங்கள்...

யார் உங்களை காப்பாற்றியது என்று ...?

பெரும்பாலானோரின் பதில் இறைவன் என்றே இருக்கும்...

"எல்லாம் இறைவன் செயல் "
என்று வென்றவர்கள் அனைவரும் அமைதியாக சொல்லிவிட்டுச் செல்வார்கள் .

காரணம் ,
இறை சக்தியை அவர்கள் இறுதிக் கட்டத்தில் உணர்ந்து,
வெற்றிக் கட்டத்திற்கு வந்த உண்மையை உணர்ந்து இருப்பார்கள்...

மனிதனால் முடியாத பொழுது, வேறு ஒரு சக்தி அவனுக்கு தேவைப்படுகிறது .

அந்த சக்தி இயற்கையிடம் இருந்து பெறக்கூடிய இறை சக்திதான் .

சின்ன கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டு,
அவனுக்கு தேவையான உயிர்சக்தியை ,
இறை சக்தியை பெருக்கிக் கொள்ளும் பொழுது ,
மாபெரும் ஆற்றலை உடையவனாகிறான்.

இந்த வாழ்க்கையின் தத்துவங்களை உணர்ந்து கொள்ளும் பொழுது ,
        ஏராளமான எண்ணங்களின் தெளிவுகளைப் பெற வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்படுகிறது .

ஒரு மனிதன் குழம்பி விட்டால், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த , நடக்கப் போகும் எல்லாமே குழப்பமாகத்தான் இருக்கும் .

ஒரு மனிதன் தெளிவு பெற வேண்டும் என்று முடிவு செய்து, இயற்கையோடு இணைந்து,

       இறை சக்தியை உணர்ந்து கொண்டால் ,
தன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் ,
ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அமைந்து இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்...

மனித சக்தியை சீரமைப்பதற்கு இறை சக்தி மிகவும் அவசியம்.

இறை சக்தி என்றால் வெளியே இருந்து கிடைக்கும் சக்தி கிடையாது .

உள்ளுக்குள்ளே உறைந்து கிடக்கும் உயிர் சக்திதான் இறை சக்தி...

பனிப் பிரதேசத்தில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக இருந்தாலும் ,
உருகுவதற்கு ஆதவன் தேவைப்படுகிறான் அல்லவா...

அதே போலத்தான் ஆலயங்களும், மற்ற இயற்கை சக்திகளும் ...

உள்ளுக்குள் இருக்கும் உயிர் சக்தியை ,
ஆக்கபூர்வமாக செயல்படுத்துவதற்கு,
இறை சக்தியை நாம் நாடிச் செல்ல வேண்டிய அவசியத்தை , அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்...

இதை தற்போது சொல்லுவதற்கு காரணம் ...

தற்போது பெரும்பாலானோர் , சிக்கல் தீர்க்க முடியாத சூழலில்தான் உள்ளனர்...,

தன்னுடைய சூழல் சரியாகாது என்று தெரிந்துகொண்டு ,

டிவி பார்த்துக் கொண்டிருப்பதும், நேரம் கழிப்பதற்காக ,
பொழுது போக்குவதற்காக,
வீண் கதைகளைப் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்...

மதுபானங்களை அருந்திக் கொண்டும் ,
புகைபிடிப்பதை வாடிக்கையாக வைத்துக் கொண்டும்,
தேவையற்ற நபர்களிடம் அலைபேசியில் பேசிக் கொண்டும்,
தன்னுடைய எண்ணச் சிதறல்களை அதிகம் ஆக்கிக்கொள்கிறார்கள்...

நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கவே,

நம்மால் முடியாத பொழுது,

நமக்கு சம்பந்தம் இல்லாத மற்றவர்களைப் பற்றி விமர்சித்தும் , கேலி செய்தும் பேசுவதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது ...?

அப்படி ஏதாவது பிறரைப் பற்றிப் பேச வேண்டி இருந்தால் ,
அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது சாலச்சிறந்தது...

நம்மால் எப்பொழுது முடியாது என்று  உணர்ந்துகொள்கிறோமோ,
அப்போது ,
இறைவா என்னால் முடியவில்லை ,
என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துங்கள் ,
எனக்காக வழி காட்டுங்கள் என்று இறைவனின் நாமத்தை உச்சரிக்க தொடங்குங்கள்...

உங்கள் குல தெய்வத்தையோ , அல்லது இஷ்ட தெய்வத்தையோ இறுக்கமாக பற்றிக் கொள்ளுங்கள் .

இது ஏதோ ஒரு சாக்கு போக்கிற்காக சொல்லவில்லை..

இதில் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது .

ஆத்திகமும், நாத்திகமும் இங்கே கேள்வி  கிடையாது.

நம்முடைய மனதின் ஆழ்மன சக்தியை எழுப்பி ,
ஒரு இயற்கை சக்தியின் பிரவாகத்தை ,
உள்ளுக்குள் இருந்து எடுத்து ,
ஒரு மனிதன் வெற்றி பெறுவதற்காகவும் ,
அவனுடைய சிக்கலை தீர்ப்பதற்காகவும்,
உண்மையான ஒரு தத்துவத்தை உணர செய்வதற்கான வழிகாட்டுதல் இது...

ஆகவே நம்மால் முடியாது என்று எப்போது தோன்றுகிறதோ, அப்போது எல்லாம் இறை சக்தியை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளுங்கள் .

வேறு ஏதும் தேவையற்ற வேலைகளில் கவனம் செலுத்தாதீர்கள் .

கூடிய மட்டும் நம்மால் எப்பொழுது எல்லாம் ஒரு காரியம் ஆரம்பிக்கப்படுகிறதோ ,
அப்பொழுது எல்லாம் நம்முடைய பங்கு 50 சதவிகிதம்,
இறைவனின் பங்கு 50 சதவிகிதம் இருக்கிறது என்று நம்புங்கள்...

எந்த வேலையை எடுத்தாலும், இறை சக்தியோடு,
இயற்கை சக்தியோடு இணைத்துத் தொடங்குங்கள் .

ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் பொழுது, பத்து பேருக்கு அன்னதானம் கொடுங்கள்.

10 மரக் கன்றுகளை நடுங்கள்.

முடியாவிட்டால் 10 மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்.

கண்ணில் தென்படும் பறவைகளுக்கு கொஞ்சம் தானியங்களை கொடுங்கள்...

அருகே சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு புல் கட்டுகளை வாங்கிக் கொடுங்கள் .

அவைகள் எல்லாம் இயற்கையின் இறைசக்தியின் அங்கங்கள்...

உயிர் சக்தியின் உற்சாகத்தை அப்போது உணர்வீர்கள்...

விளையாட்டிற்காக சொல்லவில்லை ...

வினையாகி முடிந்துவிடாமல் , வாழ்க்கை நகர்ந்து செல்வதற்கான அற்புதத்தை சொல்லுகிறேன் .

காலம் கடந்து ஞானம் வருவதைவிட ,
காலத்தோடு நாம் நல்ல முறையாக பயணம் செல்லும் பொழுது ,
வாழ்க்கை மிகவும் அழகாக , தெள்ளத்தெளிவாக நீரோடையாக நீந்திக் கொண்டே செல்லலாம்...

இறைசக்தியின் நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டு, உயிர் சக்தியை உள்வாங்கிக்கொண்டு ,
அழகான வாழ்க்கையை உருவாக்குவோம்.. 🙏                                                                                                .மிக சக்தி வாய்ந்த சர்வ தெய்வ வசிய மந்திரம்

ஓம் ஒங்கராய நமசிவாய
ஒம் நகாராய நமசிவாய
ஒம் மகாராய நமசிவாய
ஒம் சிகாராய நமசிவாய
ஓம்வகாராய நமசிவாய
ஒம் யகாராய நமசிவாய
ஒம் நம ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய சர்வாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா!                                                                              .இந்த நாளும் உங்கள் அனைவருக்கும் மிக இனிய
நாளாகட்டும் ,

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...